»   »  என்ன ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனேவா? அதுவும் வின் டீசலுடனா? - பரபரக்கும் பாலிவுட்!

என்ன ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனேவா? அதுவும் வின் டீசலுடனா? - பரபரக்கும் பாலிவுட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, ஹாலிவுட் நடிகரான வின் டீசல் உடன் இணைந்து நடிக்க உள்ளதாக சினிமா உலகில் செய்தி ஒன்று வலம் வந்து கொண்டிருக்கின்றது.

பாலிவுட்டில் 100 கோடிக்கு மேல் வசூல்களை குவித்த பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை தீபிகா படுகோனே.

இவர் தற்சமயம் நடித்து வெளியான தமாஷா படமும் ஹிந்தியில் சக்கைப் போடு போட்டு வருகின்றது.

வின் டீசலுடன் தீபிகா:

வின் டீசலுடன் தீபிகா:

இந்நிலையில் ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் ஸ்டாரான வின் டீசலுடன் ஹாலிவுட் படமொன்றில் தீபிகா நடிக்க உள்ளார் என்கின்ற தகவல் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் உள்ளாக்கியுள்ளது.

தமாஷ டூ அமெரிக்கா:

தமாஷ டூ அமெரிக்கா:

தமாஷா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு பிறகு அமெரிக்காவிற்கு சென்றுள்ள தீபிகா அங்கு வின்னை சந்தித்துள்ளார். இந்நிலையில் அவருடன் நடிக்க இருக்கும் படத்தின் பேச்சுவார்த்தைக்குதான் தீபிகா அங்கு சென்றார் என்று செய்திகள் பரவி வருகின்றன.

சமூக வலைதளங்களில் புகைப்படம்:

சமூக வலைதளங்களில் புகைப்படம்:

மேலும், இதை உறுதிப் படுத்தும் வகையில் தீபிகாவும், வின் டீசலும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

சீக்கிரம் சொல்லுங்கம்மா:

சீக்கிரம் சொல்லுங்கம்மா:

எனினும், அந்த போட்டோவினை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தீபிகா இதுகுறித்து இன்னும் உறுதி படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Bollywood diva Deepika Padukone recently surprised everyone by meeting Hollywood action star Vin Diesel. Both the actors have uploaded their pictures on their Instagram accounts and other social media platforms.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil