பாத்ரூம் டூர் வீடியோவ வெளியிட்ட தீபிகா படுகோன்.. பாத்ரோப் உடையில் எப்படி இருக்காரு பாருங்க!
மும்பை: நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிக்காக ரெடியான வீடியோவை பாத்ரூமில் இருந்து கிளம்புவதில் ஆரம்பித்து வெளியிட்டு இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பிக் பாஸ் அர்ச்சனா மற்றும் அவரது மகள் ஸாரா வெளியிட்ட பாத்ரூம் டூர் வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம டிரெண்டானது.
நெட்டிசன்கள் சிலர் பங்கமாக அந்த வீடியோவை ட்ரோல் செய்தும் வந்தனர். இந்நிலையில், நடிகை தீபிகா படுகோன் பாத்ரோபில் பாத்ரூமில் எடுத்த வீடியோவை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

சர்வதேச நடிகையாக
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து வந்த நிலையில், வின் டீசர் நடிப்பில் வெளியான XXX: Return of Xander Cage எனும் ஹாலிவுட் படத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடித்து சர்வதேச நடிகையாக மாறினார். தொடர்ந்து வெளிநாட்டில் நடக்கும் விருது விழா நிகழ்ச்சிகளில் தீபிகா படுகோனுக்கு அங்கீகாரங்கள் கிடைத்து வருகின்றன.

கான்ஸ் ஜட்ஜ்
கான்ஸ் திரைப்பட விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அதில், ஜட்ஜாக இந்தியா சார்பில் நடிகை தீபிகா படுகோன் கலந்து கொண்டது இந்திய திரைத்துறைக்கே பெரும் அங்கீகாரமாக மாறி உள்ளது. கான்ஸ் ரெட் கார்ப்பெட்டில் அனுதினமும் வித விதமான உடையில் கலந்து கொண்டு அசத்தினார் தீபிகா படுகோன்.

ஆஸ்கர் மேடையில்
இந்நிலையில், இந்த ஆண்டு ஆஸ்கர் பிரெசன்ட்டராக தீபிகா படுகோன் ஆஸ்கர் விழாவில் கலந்து கொண்டு மெழுகு சிலையாக கருப்பு நிற கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பற்றி பேசி அந்த பாடல் பற்றியும் பெருமையாக பேசி அசத்தி இருந்தார் தீபிகா படுகோன்.

பாத்ரூம் டூர்
ஆஸ்கர் ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சிக்காக அழகு பதுமையாக தீபிகா படுகோன் பங்கேற்க பாத்ரூமில் குளித்து முடித்து விட்டு வொர்க்கவுட் எல்லாம் செய்து விட்டு கிளம்பும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பாத்ரூம் முழுக்க சன் ஸ்க்ரீன் லோஷனை விளம்பரப்படுத்தும் வகையில் இவர் வெளீயிட்ட வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.
பாத்ரோப் உடையில்
பாத்ரூமில் பாத்ரோப் உடையில் செம ஹாட்டாக இருந்த தீபிகா படுகோன் முகத்தை கழுவுவது உடை மாற்றி ரெடியாகுவது என அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார் தீபிகா படுகோன். 72 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள தீபிகா வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஒரு மில்லியன் வியூஸை கடந்துள்ளது.


Click it and Unblock the Notifications











