பாரிஸில் பளபள பேஷன் ஷோ.. கடைசி நேரத்தில் கேன்சல் செய்த தீபிகா படுகோன்.. இதுதான் காரணம்!
சென்னை: பாரிஸில் நடக்கும் பேஷன் ஷோவில் கலந்துகொள்ள சம்மதித்திருந்த நடிகை தீபிகா படுகோன் கடைசி நேரத்தில் அதை கேன்சல் செய்துள்ளார்.
Recommended Video
பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன், தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார்.
பிசி நடிகையான இவர், சப்பாக் என்ற படத்தில் திராவகம் வீசப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். உண்மைக் கதையான இந்தப் படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

பேஷன் ஷோ நிகழ்ச்சி
இப்போது '83' படத்தில் கபில்தேவின் மனைவி கேரக்டரில் நடித்துள்ளார். இதில் கபில்தேவாக அவர் கணவர் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இதை இயக்குனர் மறுத்தார்.

திடீரென கேன்சல்
இந்நிலையில், நடிகை தீபிகா படுகோன் பாரிஸ் நகரில் நடந்து வரும் பேஷன் வாரம் நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்தார். அவர் வருவதாகக் கூறியிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடைசி நேரத்தில் அவர் தனது திட்டத்தை, கேன்சல் செய்துள்ளார். இதற்கு கொரோனா வைரஸ் பிரான்ஸில் பரவி வருவதுதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமாக பரவுகிறது
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் உகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அடுத்தடுத்து பரவி உள்ளது. தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரானிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் காரணமாகப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள்
சீனாவில் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாடு தெரிவித்து இருந்தாலும் இந்த வைரஸ் இப்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரான்ஸிலும் இந்த வைரஸ் பரவியுள்ளதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் நடிகை தீபிகா படுகோன் தனது பாரிஸ் பயணத்தை ரத்து செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











