இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்துக்கு வந்து அதிதி ஷங்கருடன் குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் எல்லாம் வெளியாகின. ஆனால், தீபிகா படுகோன் எங்கேப்பா காணோமே என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், ரசிகர்களுக்கு அதற்கான விடை கிடைத்திருக்கிறது.
சமீபத்தில், நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமாக உள்ளார் என்றும் சில மாதங்கள் அவர் நடிக்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மீண்டும் படப்பிடிப்பு தளத்தில் தீபிகா படுகோன் நடித்து வரும் புகைப்படம் இந்தியளவில் #DeepikaPadukone என்கிற ஹாஷ்டேக்குடன் டிரெண்டாகி வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரித்திக் ரோஷனுடன் இணைந்து எந்தளவுக்கு பீச்சில் உருண்டு புரள முடியுமோ அந்தளவுக்கு மோனோகினி உடையில் உருண்டு புரண்டு நடித்த தீபிகா படுகோனின் ஃபைட்டர் திரைப்படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை அந்த படம் பெறவில்லை.
ஷாருக்கானுடன் பேக் டு பேக் ஹிட்: கடந்த ஆண்டு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் உடன் ஜோடி போட்டு தீபிகா படுகோன் நடித்த பதான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு நடித்த ஜவான் படத்திலும் அப்பா ஷாருக்கானுக்கு ஜோடியாக பிளாஷ்பேக் காட்சியில் நடித்து கலங்க வைத்திருப்பார் தீபிகா படுகோன்.
மனைவி இல்லாமல் வந்த ரன்வீர் சிங்: ஷங்கர் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் மனைவி தீபிகா படுகோன் இல்லாமல் சோலோவாக வந்த ரன்வீர் சிங் அதிதி ஷங்கருடன் அப்படியொரு ஆட்டத்தை போட்டிருந்தார். ஜான்வி கபூர், காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என பிரபல நடிகைகள் பலரும் பங்கேற்ற திருமண விழாவில் தீபிகா படுகோன் கலந்து கொள்ளாமல் போன நிலையில், கர்ப்பமாக இருப்பதால் பங்கேற்கவில்லையா என்கிற கேள்விகள் எழுந்தன.

காக்கி சட்டையில் தீபிகா படுகோன்: கர்ப்பமாக இருப்பதால் தான் தீபிகா படுகோன் வரவில்லை என ரசிகர்கள் நினைத்த நிலையில், சிங்கம் அகைன் படத்தின் படப்பிடிப்பில் லேடி சிங்கமாக காக்கி சட்டை, காக்கி பேண்ட், போலீஸ் பெல்ட் எல்லாம் அணிந்துக் கொண்டு தாறுமாறாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார் தீபிகா படுகோன். படப்பிடிப்பில் பிசியாக உள்ள நிலையில் தான் தீபிகா படுகோன் திருமண விழாவில் பங்கேற்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது. பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











