கேக்குடன் காத்திருந்த ரசிகர்.. ரசிகருக்கு கேக் ஊட்டிவிட்ட தீபிகா.. குவிகிறது பாராட்டு!
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் 34வது பிறந்த நாள் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டது.
பிரபலங்கள், ரசிகர்கள் என சமூக வலைதளங்களில் தீபிகா படுகோன் வாழ்த்து மழையில் நனைந்தார்.
அனைத்திற்கும் மேலாக, மும்பை ஏர்ப்போர்ட்டில் அதிகாலை இறங்கியதுமே அவருக்கு காத்திருந்த பிறந்த நாள் சர்ப்ரைஸ் தான் சிறப்பு வாய்ந்தது.
ஹேப்பி பர்த்டே தீபிகா
பாலிவுட்டில் கலக்கி வரும் பெங்களூர் பொண்ணு தீபிகா படுகோனுக்கு இன்று 34வது பிறந்த நாள். ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ராம் லீலா, பத்மாவத் என பல படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வரும் தீபிகா படுகோனுக்கு ஹேப்பி பர்த்டே.

சபாக் ரிலீஸ்
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மியின் கதையை அடிப்படையாகக் கொண்டு சபாக் எனும் படத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். வரும் ஜனவரி 10ம் தேதி சபாக் திரைப்படம் ரிலீசாகிறது. அந்த படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் படுபிசியாக பல இடங்களுக்கு சுற்றித் திரிந்து வருகிறார் தீபிகா படுகோன்.

ஹாலிவுட்
வின் டீஸல் நடிப்பில் வெளியான டிரிப்பிள் எக்ஸ் 3 படத்தில் நாயகியாக நடித்த தீபிகா படுகோன், டிரிப்பிள் எக்ஸ் 4ம் பாகத்திலும் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அதற்கான சிக்னலையும் வின் டீஸல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மும்பை ஏர்ப்போர்ட்
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் 34வது பிறந்த நாளை மும்பையில் இன்று கொண்டாட அவரும் அவரது கணவர் மற்றும் நடிகரான ரன்வீர் சிங் இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு அதிகாலை வந்து இறங்கினர்.

சர்ப்ரைஸ் கேக்
தீபிகா படுகோன் வருவதை முன்னதாக அறிந்திருந்த பத்திரிகையாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அவர்களை பேட்டி எடுக்க ஏர்ப்போர்ட்டில் காத்திருந்தனர். அப்போது, அவருக்காக காத்திருந்த ஒரு புகைப்படக் கலைஞர் சர்ப்ரைஸாக கேக் ஒன்றை தீபிகா படுகோன் வந்து இறங்கியதும் நீட்டினார்.

தீபிகா ஹேப்பி
அந்த புகைப்படக் கலைஞரின் அன்பை பார்த்து ஆச்சர்யமடைந்த தீபிகா படுகோன், ஏர்போர்ட்டிலே கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். தீபிகாவும் ஹேப்பி அந்த போட்டோகிராஃபரும் டபுள் ஹேப்பி
கேக் ஊட்டிவிட்ட தீபிகா
கேக் கட் பண்ணியதும் ரன்வீர் சிங்குக்கு ஊட்டப் போனார் தீபிகா அனால், ரசிகருக்கு முதலில் ஊட்டு என ரன்வீர் செல்லமாக ஆர்டர் போட, அந்த ரசிகருக்கு தீபிகா கேக்கை ஊட்டிவிட்டார். பின்பு, அந்த ரசிகரும் தீபிகாவுக்கு கேக்கை ஊட்டிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

குவிகிறது பாராட்டு
தீபிகா படுகோனின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் ரசிகர் ஒருவர் கேக்கை வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய தீபிகாவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











