நீக்கமாட்டேன்னு சொன்னாரே... முன்னாள் காதலரின் டாட்டூ மாயம்... ஆபரேசன் மூலம் நீக்கினாரா தீபிகா?
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது கழுத்தில் வரைந்திருந்த முன்னாள் காதலரின் இன்ஷியல் டாட்டூவை ஆபரேஷன் மூலம் நீக்கியுள்ளார்.
பிரபல இந்தி நடிகை தீபீகா படுகோன், நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வந்தார். சில வருடங்களாக இவர்கள் காதல் தொடர்ந்தது.
பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் தீபிகா படுகோன்.

ஆர்.கே டாட்டூ
ரன்பிர் கபூரை அவர் காதலிக்கும்போது, காதல் மிகுதியால், ரன்பிர் கபூரின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து, ஆர்.கே என்று தனது கழுத்தின் பின் பக்கத்தில் டாட்டூ குத்தியிருந்தார் தீபிகா. இந்த டாட்டூ அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

வருத்தம் இல்லை
'அந்த டாட்டூ குத்தியதில் வருத்தம் இல்லை. அவரை பிரிந்த பின்னும் அதை நீக்க வேண்டும் என நினைக்கவில்லை. அதை நீக்கும் எண்ணமும் இல்லை' என்று கூறியிருந்தார் தீபிகா.

நிகழ்ச்சி ஒன்றில்
இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புடவையில் கலந்துகொண்டார் தீபிகா. அப்போது அவர் கழுத்தின் பின்பக்கத்தில் டாட்டூ இல்லாதது தெரியவந்தது.

ஆலியா பட்
அதை அவர் ஆபரேஷன் மூலம் நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ரன்பிரை பிரிந்துவிட்டாலும் இன்னும் அவருடன் நட்பைத் தொடர்கிறார் தீபிகா. ரன்பிர் , இப்போது நடிகை ஆலியா பட்டை காதலித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











