Fighter: ஹ்ரித்திக் ரோஷனுடன் பீச்சில் அப்படி ஒட்டி உரசி ஆடிய தீபிகா படுகோன்.. இத்தனை கோடி சம்பளமா?
மும்பை: ஷாருக்கான், தீபிகா படுகோனை வைத்து இந்த ஆண்டு பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் அடுத்து ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அந்தப் படத்திலிருந்து 'இஸ்க் ஜெய்ஸா குச்' எனும் பாடல் நேற்று வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் செம ஹேண்ட்ஸம் ஹங்காக இந்த வயதிலும் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு கட்டுமஸ்த்தான உடம்புடன் பாலிவுட் ரசிகைகளை தன் பக்கம் கவர்ந்து இழுத்து வருகிறார். இன்னொரு பக்கம் நடிகை தீபிகா படுகோன் பதான் படத்தில் நடித்ததை விட மேலும் எல்லை மீறிய கிளாமர் காட்டி நடித்துள்ளார். அப்படி நடிக்க இந்த படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

நயன்தாராவை விட அதிகம்: இந்திய சினிமாவில் நடிகர்கள் 100 கோடி, 200 கோடி என வாங்கி வரும் நிலையில், நடிகைகளின் சம்பளம் மிக மிகக் குறைவாகவே உள்ளது. அதற்கு காரணம் சோலோ ரிலீசாக தாங்கள் நடிக்கும் உமன் சென்ட்ரிக் படங்களை வெளியிட்டு 100 கோடி வசூலை வாரிக் குவிக்க முடியாமல் திணறுவது தான் என்கின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விட தீபிகா படுகோன் தான் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.
கார்ஜியஸ் காட்டேரி: பீச் பம் தெரியும் படி இந்தளவுக்கு கார்ஜியஸாக இந்திய நடிகைகள் நடனம் ஆடுவார்களா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு ஸ்கிரீனை தீப்பிடிக்க வைக்கும் முயற்சியில் தீபிகா படுகோன் நீச்சல் உடையில் அசுர ஆட்டம் போட்டுள்ளார். அந்தப் பாடலின் வீடியோ காட்சிகள் தற்போது 19 மில்லியன் பார்வைகளை கடந்து ட்ரெண்டாகி வருகிறது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில்: இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், ஷாருக்கான் சில வருட ஓய்வுக்கு பிறகு மீண்டும் டிக் செய்தது சித்தார்த் ஆனந்த் படத்தை தான். இந்த ஆண்டு ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த பதான் திரைப்படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி கொடுத்தது. மேலும், அடுத்த ஆண்டு ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படம் அதே போல பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபிகா படுகோன் சம்பளம்: இந்த படத்திற்கு நடிகை தீபிகா படுகோன் 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை நயன்தாரா ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாயும், ஆலியா பட் ஒரு படத்துக்கு 10 முதல் 12 கோடி ரூபாய் வரையும் சம்பளம் வாங்கி வரும் நிலையில், இதுவரை 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த தீபிகா படுகோன் ஃபைட்டர் படத்துக்கு 15 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹ்ரித்திக் ரோஷன் சம்பளம்: தமிழ் சினிமா நடிகர்களே 100 கோடி சம்பளத்தை தாண்டிய நிலையில், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் இந்த படத்துக்கு 80 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு பிறகு அவருடைய சம்பளம் 100 கோடியை தாண்டும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











