கர்ப்பமான மனைவியை பிரிகிறாரா ரன்வீர் சிங்?.. திடீரென டெலிட் செய்யப்பட்ட திருமண புகைப்படங்கள்!

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த திருமண புகைப்படங்களை எல்லாம் நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக சினிமா பிரபலங்கள் சமந்தா முதல் பலர் திருமண முறிவு அறிவிப்பை வெளியிட சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது இரண்டாவது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடனான பிரேக்கப்பை அறிவிக்கும் விதமாக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருந்தார். சில வருடங்களுக்கு முன்னதாக நடிகை சமந்தா தனது பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனியை நீக்கினார். அதன் பின்னர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அதே போல ரன்வீர் சிங் தீபிகா படுகோனை பிரிய போகிறாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Deepika Padukone husband Ranveer Singh deletes wedding photos again stirred divorce talks

தீபிகா படுகோன் கர்ப்பம்: 38 வயதாகும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கை 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவு எடுத்தனர் என்றும் தீபிகா படுகோன் கர்ப்பமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

மீண்டும் சூட்டிங்: ஆனால், திடீரென காக்கிச்சட்டை அணிந்து கொண்டு போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோன் அதிரடியாக நடிக்கும் காட்சிகள் வெளியான நிலையில், கர்ப்பமாக உள்ளாரா? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் அதற்கு எந்த ஒரு விளக்கமும் தீபிகா படுகோன் தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

திருமண புகைப்படங்கள் நீக்கம்: இந்நிலையில், இன்று திடீரென பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த திருமண புகைப்படங்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. அதையறிந்த பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்ப்பிணியாக தீபிகா படுகோன் இருக்கும் நேரத்தில் அவரை விட்டு ரன்வீர் சிங் பிரிய போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், திருமண புகைப்படங்களை தவிர்த்து தீபிகா படுகோன் உடன் ரன்வீர் சிங் இருக்கும் மற்ற புகைப்படங்கள் அப்படியே இருப்பதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

என்ன ஆகப் போகுதோ?: தீபிகா படுகோன் கல்கி படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அடுத்து சிங்கம் அகைன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ரன்வீர் சிங் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு தீபிகா படுகோன் குழந்தையை பெற்றெடுப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல திருமண புகைப்படங்கள் நீக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது எதற்கான அறிகுறி என தெரியவில்லை. இருவருக்கும் இடையே ஏதாவது பிரச்னை வெடித்து விட்டதா? அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமா? என ஏகப்பட்ட குழப்பங்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X