கோச்சடையான் நாயகி தீபிகாவின் நீண்ட்ட காதலர்கள் பட்டியல்
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. அவர் நடிப்பில் வெளியான கடைசி 6 முதல் 8 படங்கள் ஹிட்டாகிவிட்டன. இதனால் தீபிகாவை வைத்து படம் எடுக்க பாலிவுட்காரர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையே அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்த கோச்சடையான் படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
நடிப்பில் வெற்றி காணும் அவருக்கு காதல் வாழ்க்கையில் மட்டும் தோல்வி மேல் தோல்வியாக உள்ளது.

நிஹார் பாண்டியா
தீபிகாவின் முதல் காதலர் நிஹார் பாண்டியா. அவர்கள் கடந்த 2005ம் ஆண்டு மும்பையில் உள்ள நடிப்பு பள்ளியில் சந்தித்து காதல் வயப்பட்டனர். 3 ஆண்டுகள் நிஹாரை உருகி உருகி காதலித்த தீபிகா அவரை பிரிந்து சென்றுவிட்டார்.

உபென் பட்டேல்
நிஹாரை விட்டு விலகிய தீபிகா சிறிது காலம் மாடலும், நடிகருமான உபென் பட்டேல் என்பவரை காதலித்தார்.

முசம்மில் இப்ராஹிம்
உபேன் பட்டேலிடம் இருந்து பிரிந்த தீபிகா கொஞ்ச காலம் மாடலான முசம்மில் இப்ராஹிமுடன் சுற்றினார்.

யுவராஜ் சிங்
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் தீபிகா சில மாதங்கள் காதலில் இருந்தார். பின்னர் நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் என்று கூறி பிரிந்துவிட்டனர்.

சித்தார்த்
தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துடன் சில காலம் சுற்றினார் தீபிகா. ஐபிஎல் போட்டியின்போது ஊரே பார்க்க இருவரும் லிப் டூ லிப் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். அவர்கள் எதற்காக பிரிந்தனர் என்று தெரியவில்லை.

ரன்பிர் கபூர்
தீபிகாவும் நடிகர் ரன்பிர் கபூரும் சுமார் 3 ஆண்டுகளாக காதலித்தனர். இந்நிலையில் ரன்பீருக்கும் வேறு ஒரு நடிகைக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் தீபிகா தனியானார்.

ரன்வீர் சிங்
சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் நடிக்கையில் தீபிகாவும், ரன்வீர் சிங்கிற்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பாலிவுட் மீடியாக்கள் கதறின. இருவரும் கைகோர்த்து ஊர் சுற்றினார்கள், பார்ட்டியில் ஆட்டம் போட்டார்கள். இப்பொழுது என்னவென்றால் தீபிகா எனக்கு ஸ்பெஷலானவர் அவருடன் காதல் இல்லை என்கிறார் ரன்வீர்.


Click it and Unblock the Notifications











