'நிஜமான புன்னகை..' ஏதென்ஸ் ஏர்போர்ட்டில் நடிகை தீபிகா படுகோன் சிலை.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

By

மும்பை: ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தீபிகா படுகோனின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். தமிழில் ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார்.

இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

ஆஜராகி இருந்தார்

ஆஜராகி இருந்தார்

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் தீபிகா படுகோன், சில மாதங்களுக்கு முன் போதைப் பொருள் வழக்கில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவருடன் சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர்.

ஏதென்ஸ் ஏர்போர்ட்

ஏதென்ஸ் ஏர்போர்ட்

அனைவரும் தங்களுக்கும் போதைப் பொருள் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருந்தனர். இந்நிலையில், கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தில், நிஜமான புன்னகைகள் என்ற தலைப்பில் கண்காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.

பிரபலங்கள் சிலை

பிரபலங்கள் சிலை

கொரோனா பரவல் காரணமாக, வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுத்திருந்த அந்நாட்டு அரசு, தற்போது அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் அமெரிக்கா, ஆப்ரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாட்டு பிரபலங்களின் சிலைகளும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

கருப்பு நிற மார்பிள்

கருப்பு நிற மார்பிள்

இந்தியா சார்பாக, நடிகை தீபிகா படுகோனின் மார்பளவு சிலையும் அந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. கருப்பு நிற மார்பிள் கல்லில் தீபிகாவின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பாலிவுட் நடிகை, ஏதென்ஸ் விமான நிலையத்தில் புன்னகைக்கிறார் என்று எழுதப்பட்டுள்ளது.

மேடம் டுஸாட்

மேடம் டுஸாட்

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த போட்டோவை பகிர்ந்து வருகின்றனர். பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தீபிகாவுக்கு லண்டனின் உள்ள மேடம் டுஸாட் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டிருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X