தீபிகா 'கி' பிரச்சனையை கிளப்பியது பப்ளிசிட்டி ஸ்டண்டா?
மும்பை: தீபிகா தன்னுடைய ஃபைன்டிங் ஃபேனி படம் ரிலீஸாகியுள்ள நிலையில் கிளீவேஜ் பிரச்சனையை எழுப்பியுள்ளது விளம்பரத்திற்காக என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டின் முன்னணி நாயகியான தீபிகா படுகோனே முன்னழகில் பெரும்பகுதியை காட்டியபடி உடை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவரை புகைப்படம் எடுத்த பிரபல ஆங்கில நாளிதழ் தீபிகாவின் கிளீவேஜ் பற்றி செய்தி வெளியிட்டது.
அதை பார்த்த தீபிகா ட்விட்டரில் அந்த நாளிதழை விளாசித் தள்ளினார்.

படங்கள்
தீபிகா நடித்துள்ள ஃபைன்டிங் ஃபேனி கடந்த 12ம் தேதி ரிலீஸாகியுள்ளது. மேலும் அவர் நடித்துள்ள ஹேப்பி நியூ இயர் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.

விளம்பரம்
ஒரு படம் ரிலீஸான கையோடு தீபிகா இந்த கிளீவேஜ் விஷயத்தை பிரச்சனையாக்கியிருப்பது விளம்பரம் தேடத் தான் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்பும்
தீபிகா இதற்கு முன்பும் இப்படி முன்னழகில் பெரும்பகுதியை காட்டியபடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அப்போதும் நாளிதழ்கள் அதை செய்தியாக வெளியிட்டன. அப்போது எல்லாம் கண்டுகொள்ளாத அவர் தற்போது அவரின் படம் ரிலீஸாகிய கையோடு பிரச்சனை செய்துள்ளது விளம்பரத்திற்காக தான் என சிலர் விமர்சித்துள்ளனர்.

நடிகை
ஒரு நடிகை தன்னை இழிவுபடுத்துவதை எதிர்த்து கேட்டால் அதை உடனே விளம்பரம் தேடுகிறார் என்று கூறுவதா என்று சிலர் கோபத்தில் பொங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











