ஷாருக்கான், ஃபரா கான் என்னை அப்பா, அம்மா மாதிரி பார்த்துக்கிறாங்க: தீபிகா
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், இயக்குனர் ஃபரா கானும் தன்னை பெற்றோர் போன்று பாதுகாப்பதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
தீபிகா படுகோனே ஃபரா கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். முதல் படத்திலேயே பாலிவுட் பாதுஷா ஷாருக்கானின் ஜோடியாக நடித்தார்.
படமும் ஹிட்டாகி அவரும் பிரபலம் ஆனார்.

சென்னை எக்ஸ்பிரஸ்
ஓம் சாந்தி ஓம் படத்திற்கு பிறகு தீபிகா, ஷாருக்கான் இணைந்து நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

3வது முறையாக
ஷாருக், தீபிகா 3வது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் ஹேப்பி நியூ இயர். இந்த படத்தை இயக்குபவர் ஷாருக்கின் நெருங்கிய தோழி ஃபரா கான்.

பெற்றோர் மாதிரி
ஷாருக்கானும், ஃபரா கானும் பெற்றோர் போன்று என்னை பார்த்துக் கொள்கின்றனர் என்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

ரன்வீர்
தீபிகாவும், அவரது ராம் லீலா படத்தின் ஹீரோ ரன்வீர் சிங்கும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது.


Click it and Unblock the Notifications











