ஓடி ஓடி உழைக்கிறார், ஒரு நாளைக்கு 15 மணிநேரம் உழைக்கிறார் தீபிகா
மும்பை: தீபிகா படுகோனே உட்கார கூட நேரம் இன்றி ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்திருக்கிறாராம் சாரி நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
பாலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்ததால் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார் தீபிகா படுகோனே. அதே வேகத்தில் தமிழிலும் கோச்சடையான் மூலம் ஒரு இடத்தை பிடித்துவிடலாம் என்று நினைத்த அவருக்கு ஏமாற்றமே மிச்சம்.
ஆனால் பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவியத் தான் செய்கிறது.

ஹேப்பி நியூ இயர்
தீபிகா ஷாருக்கான் ஜோடியாக நடித்து வரும் ஹேப்பி நியூ இயர் படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.

3 படங்கள்
தமாஷா, பிகு மற்றும் பாஜிராவ் மஸ்தானி ஆகிய 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் தீபிகா.

விளம்பரங்கள்
படங்கள் தவிர தீபிகா விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இதனால் நாள் ஒன்றுக்கு 14 முதல் 15 மணிநேரம் வேலை செய்கிறாராம்.

பிரான்ஸ்
முன்னாள் காதலர் ரன்பிர் கபூருடன் சேர்ந்து அவர் நடிக்க உள்ள தமாஷா படத்திற்காக ஒரு மாதம் பிரான்ஸ் செல்கிறார். அதற்குள் விளம்பர பட ஷூட்டிங்கை முடித்துக் கொடுக்க முடிவு செய்துள்ளார் தீபிகா.

சம்பளம்
படங்களில் நடிக்க கோடிகளில் வாங்கும் தீபிகா விளம்பரங்களில் மூலம் கை நிறைய அல்ல பை நிறையவே சம்பாதிக்கிறார்.


Click it and Unblock the Notifications











