»   »  10 புள்ளை பெத்துக்கனுமாம் படுகோனே பெத்த தீபிகாவுக்கு!

10 புள்ளை பெத்துக்கனுமாம் படுகோனே பெத்த தீபிகாவுக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தீபிகா படுகோனேவுக்கு குழந்தைகள் என்றால் உயிராம். அதனால் அவர் 10 குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்.

பெங்களூரில் இருந்து ஒரு சுபயோக சுபதினத்தில் மும்பை சென்றார் தீபிகா படுகோனே. அவரை பார்த்த ஃபரா கான் தான் இயக்கிய ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க வைத்தார்.

ஷாருக்கானுக்கு புதுப்பெண் ஜோடியா, ம்ம்ம் எல்லாம் அவர் அதிர்ஷ்டம் என்றார்கள். படம் ஹிட்டானது. ஷாருக், தீபிகா ஜோடி வெற்றி ஜோடியானது.

குருட்டாம்போக்கு

குருட்டாம்போக்கு

ஏதோ குருட்டாம்போக்கில் ஷாருக்-தீபிகா ஜோடி ஓம் சாந்தி ஓமில் ஹிட்டாகிவிட்டது என்று பேசப்பட்டது. அதை பொய் என்று நிரூபிக்கும் வகையில் சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் ஆகிய படங்களிலும் ஷாருக்கான், தீபிகா ஜோடியாக நடித்தனர். அந்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தீபிகா

தீபிகா

பாலிவுட்டின் வெற்றி நாயகி என்ற பெயருடன் ஒய்யாரமாக வலம் வருகிறார் தீபிகா. அவர் நடிக்கும் படங்கள் எப்போதாவது அல்ல மாறாக அடுத்தடுத்து ஹிட்டாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

காதல்

காதல்

தீபிகா நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார். அவர்கள் காதலிப்பது பாலிவுட் மட்டும் இன்றி அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அவர்கள் தங்களின் காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் உள்ளனர்.

திருமணம்

திருமணம்

அடுத்த ஆண்டு ரன்வீருக்கும், தீபிகாவுக்கும் திருமணம் நடக்கக்கூடும் என்கிறது பாலிவுட் பச்சி. இந்நிலையில் தீபிகா குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி தெரிவித்துள்ளார்.

குழந்தை

குழந்தை

தீபிகாவுக்கு குழந்தைகள் என்றால் உயிராம். அதனால் ஒன்றல்ல, இரண்டல்ல 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் தீபிகா. அம்மாடியோ பத்து பிள்ளையா என்று அவர் கூறியதை கேட்டவர்கள் வியக்கிறார்கள்.

English summary
Deepika Padukone loves babies and wishes to have as many as ten babies.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil