அனிமல் பட இயக்குநருடன் மோதல்?.. செம பதிலடி கொடுத்தாரா தீபிகா படுகோனே
மும்பை: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் தீபிகா படுகோனே. அவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. தமிழில் அவர் கோச்சடையான் படத்திலும் நடித்திருக்கிறார். அவர் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து சில வருடங்கள் முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் பிஸியாக நடித்துவரும் அவர் அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார்.
இந்தியாவின் முன்னாள் பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள் தீபிகா படுகோனே. தனது தந்தை விளையாட்டு வீரராக இருந்தாலும் தனக்கு சினிமாதான் சரி என்பதை முடிவு செய்து அதனையே தேர்ந்தெடுத்தார் தீபிகா. டென்மார்க்கில் பிறந்த அவர் 2006ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் தீபிகா மனம் தளரவில்லை.
பாலிவுட்டில் என்ட்ரி: சூழல் இப்படி இருக்க அவரை பாலிவுட் உலகம் வரவேற்றது. அதன்படி 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் அங்கு அறிமுகமானார். ஹிந்தியில் அறிமுகமான முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக தோன்றியதால் பலரும் தீபிகாவை ஆச்சரியமாகவே பார்த்தார்கள். மேலும் அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து தீபிகாவின் கரியரை நல்லபடியாக பாலிவுட்டில் தொடக்கி வைத்தது.
தொடர் வாய்ப்புகள்: ஓம் சாந்தி ஓம் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு கிளாமராகவும், திறமையாகவும் நடித்து ஒட்டுமொத்த பாலிவுட்டினரையும் தன்னை திரும்பி பார்க்க வைத்தார். வருடத்திற்கு அதிகபட்சம் ஐந்து படங்கள்வரை நடித்திருக்கிறார் அவர். தமிழில்கூட கோச்சடையான் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தமிழில் அவரால் சோபிக்க முடியவில்லை. கடைசியாக கல்கி படத்தில் நடித்திருந்தார் அவர்.

திருமணம்: இதற்கிடையே பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்த தீபிகா படுகோனே அவரையே சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை காதலோடும், அமைதியோடும் நகர்ந்துகொண்டிருக்கிறது. திருமணத்த்க்கு பிறகு தீபிகா நடிப்பதற்கு ரன்வீர் எந்தவிதமான தடையையும் போடவில்லை. கடந்த வருடம்தான் அந்தத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்பிரிட்: இந்நிலையில் அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். ஆனால் சந்தீப்புடன் அவருக்கு மோதல் வந்துவிட்டதாக கூறப்பட்டது. சந்தீப்பும் தனது எக்ஸ் தளத்தில், "நான் ஒரு நடிகரிடம் கதையை சொல்லும்போது அவர் மீது 100 சதவீதம் நம்பிக்கை வைத்திருக்கிறேன். வருடக்கணக்கான உழைப்பு என்னுடையது. ஃபிலிம் மேக்கிங்தான் எனகு எல்லாமே. கதையை வெளியே கசிய விடுவதுதான் உங்கள் பெண்ணியமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
தீபிகாவின் பதிலடி: இந்நிலையில் தீபிகா படுகோனே ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, "என்னை சமநிலையில் வைத்திருப்பது உண்மையாக இருப்பதுதான். ஒவ்வொருவரும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சிக்கலான அல்லது கடினமான சூழ்நிலைகளை நான் எதிர்கொள்ளும்போது எனது உள்ளே இருக்கும் குரலைத்தான் கேட்கிறேன். அது சொல்படி கேட்டு அமைதியை தரும் முடிவுகளை எடுக்கிரேன். அப்போது நான் சமநிலையான இடத்தில் இருப்பதாக உணர்கிறேன்" என தெரிவித்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் சந்தீப்புக்குத்தான் தீபிகா பதிலடி கொடுத்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











