ரஜினியை தொடர்ந்து கமலுக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே

By Siva

சென்னை: இந்தி நடிகை தீபிகா படுகோனே ரஜினிகாந்தை தொடர்ந்து கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

தீபிகா படுகோனே முதன்முதலாக பாலிவுட் பாதுஷா ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படத்தில் அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் பிரபலாமானார். இதையடுத்து பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் பலரும் ஜோடி சேர விரும்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு தீபிகாவுக்கு கிடைத்தது.

ரஜினியுடன் கோச்சடையானில் ஜோடி சேர்ந்த தீபிகா தற்போது உலக நாயகன் கமலுடன் நடிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. தீபிகா பாலிவுட்டில் முன்னணி நடிகருடன் அறிமுகமானார். அதே போன்று கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் படத்தில் அறிமுகமாகுகிறார்.

கோச்சடையான்

கோச்சடையான்

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள கோச்சடையானில் ரஜினியின் ஜோடியாக நடித்துள்ளார் தீபிகா.

கமலை இயக்கும் லிங்குசாமி

கமலை இயக்கும் லிங்குசாமி

கமல் ஹாசனை வைத்து லிங்குசாமி படம் ஒன்று எடுக்கிறாராம். அதில் கமலுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

நன்றிக்கடன்

நன்றிக்கடன்

விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் கிடைக்காமல் கமல் அல்லாடியபோது லிங்குசாமி தானாக வந்து உதவினாராம். அந்த நன்றிக் கடனுக்காகத் தான் கமல் லிங்குசாமி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X