தீபிகா வீட்டு 'ரசம்' குடித்து மயங்கிய பாலிவுட்
மும்பை: நடிகை தீபிகா படுகோனேவின் வீட்டில் ரசம் சாதம் சாப்பிட பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு பிடிக்குமாம்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தீபிகா படுகோனே பாலிவுட்டில் கவனம் செலுத்துவதால் மும்பையில் செட்டிலாகிவிட்டார். அவர் மும்பையில் செட்டிலாகி பல ஆண்டுகள் ஆனாலும் அவருக்கு தென்னிந்திய உணவுகள் தான் மிகவும் பிடிக்குமாம்.
தீபிகாவின் வீட்டு சமையல் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் பிடித்துள்ளது.

ரசம் சாதம்
தீபிகாவுக்கு ரசம் சாதம் தான் மிகவும் பிடித்த உணவாம்.

ரசம் பவுடர்
தீபிகா தனது வீட்டில் தயாரிக்கப்படும் ரசம் பவுடரை வைத்து தான் ரசம் செய்வாராம். அந்த பவுடரை தனது நண்பர்கள், நெருக்கமானவர்களுக்கும் கொடுத்து வருகிறார்.

சூப்பர் ரசம்
தீபிகா வீட்டில் செய்யும் ரசத்தை சாப்பிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு அது மிகவும் பிடித்துவிட்டதாம். இதையடுத்து தங்களுக்கும் அந்த ரசம் பவுடர் செய்து கொடுக்குமாறு தீபிகாவை கேட்டுக் கொண்டார்களாம்.

பெரிய லிஸ்ட்
தீபிகா வீட்டில் யார் ரசம் சாப்பிட்டாலும் அவர்கள் தங்களும் அந்த பவுடரை கொடுக்குமாறு கேட்பார்களாம்.


Click it and Unblock the Notifications











