தீபிகா இத்தனை பிரச்சனை செய்தது இந்த படத்தை ஓட்ட தானா?
மும்பை: நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் கடந்த 12ம் தேதி ரிலீஸான ஃபைண்டிங் ஃபேனி படத்தின் விளம்பரத்திற்காக தான் அவர் கிளீவேஜ் பிரச்சனையை கிளப்பினார் என்று செய்திகள் வெளியாகின.
தீபிகா படுகோனே, அர்ஜுன் கபூர் ஜோடியாக நடித்த ஃபைண்டிங் ஃபேனி படம் கடந்த 12ம் தேதி ரிலீஸானது. படத்தில் தீபிகா அர்ஜுனிடம் நான் கன்னித்தன்மை கலையாத பெண் என்று கூறுவார். அந்த கன்னித்தன்மை என்ற வார்த்தையை நீக்காவிட்டால் ஏ சான்றிதழ் தான் தருவோம் என்று சென்சார் போர்டு தெரிவித்தது.
இதையடுத்து தீபிகாவும், அர்ஜுனும் சென்சார் போர்டு மீது கோபப்பட்டனர்.

படம் ரிலீஸ்
ஒரு வழியாக படம் ரிலீஸானது. படம் ரிலீஸான முதல் சில நாட்கள் நன்கு ஓடியது. ஆனால் போகப் போக தியேட்டர்கள் காத்து வாங்கத் துவங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

தீபிகா
தியேட்டர்கள் காத்து வாங்கத் துவங்கிய நேரத்தில் தீபிகா பிரபல ஆங்கில நாளிதழ் தனது கிளீவேஜ் குறித்த செய்தியை வெளியிட்டதற்காக கோபப்பட்டு ட்வீட்கள் செய்வது, பேட்டி கொடுப்பது, ஃபேஸ்புக்கில் போஸ்ட் போடுவதுமாக இருந்தார்.

சர்ச்சை
தீபிகா இத்தனை நாட்களாக அந்த கிளீவேஜ் வீடியோவை பார்த்து சும்மா இருந்துவிட்டு படம் ரிலீஸான நேரத்தில் விளம்பரம் தேட அதை பிரச்சனையாக்கியுள்ளார் என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.

பத்திரிக்கைகள்
பத்திரிக்கைகளின் அட்டைப் படங்களுக்கு உடம்பை காட்டிவிட்டு பொது இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு பிரச்சனையை கிளப்புகிறாரே தீபிகா என்று அந்த நாளிதழ் விளாசியது.

ஒரு சிலர்
தீபிகா எழுப்பிய கிளீவேஜ் பிரச்சனையை அடுத்து ஃபைண்டிங் ஃபேனி படத்தை பார்க்க ஒரு சிலர் சென்றனர். ஆனாலும் படத்திற்கு மவுசு குறைந்துவிட்டது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











