என் திருமண வரவேற்புக்கு முன்னாள் காதலர் ரன்பிர் ஏன் வரவில்லை?: தீபிகா விளக்கம்
மும்பை: தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் காதலரான ரன்பிர் கபூர் வராதது குறித்து நடிகை தீபிகா படுகோனே விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். தனது கணவர் தான் தன்னுடைய சிறந்த நண்பர் என்று தீபிகா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரன்வீர் சிங் பற்றி தீபிகா மேலும் கூறியதாவது,

காதல்
நான் யஷ்ராஜ் நிறுவனத்தில் வைத்து தான் ரன்வீர் சிங்கை முதன்முதலாக பார்த்தேன். அப்பொழுது அவர் வேறு ஒரு பெண்ணை காதலித்தார். இருப்பினும் அவர் என்னுடன் கடலை போட்டார். நீங்கள் என்னுடன் கடலை போடுகிறீர்கள் என்று நான் ரன்வீர் சிங்கிடம் தெரிவித்தேன்.

ராம் லீலா
6 ஆண்டுகளுக்கு முன்பு நான் ரன்வீரை காதலிக்கத் துவங்கியபோது நாங்கள் லஞ்ச் அல்லது டின்னர் சாப்பிட அடிக்கடி வெளியே செல்வோம். ஆனால் ராம் லீலா படத்திற்கு தயாராக இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் வீட்டில் நேரம் செலவிட்டதை மறக்கவே முடியாது. ஒரு நாள் பன்சாலி சார் எங்களை லஞ்ச் சாப்பிட தன் வீட்டிற்கு அழைத்தார்.

நண்டு
பன்சாலி சாரின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நண்டு துண்டு என் பற்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. இதை பார்த்த ரன்வீர் உங்கள் வாயில் நண்டு மாட்டிக் கொண்டது என்றார். மாட்டிக் கொண்டது என்றால் வெளியே எடுங்கள் என்றேன். அந்த தருணத்தை எங்கள் மூவராலும் மறக்க முடியாது.

ரன்பிர் கபூர்
என் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரன்பிர் கபூர் வரவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு முன்பு அவரிடம் பேசினேன். அதன் பிறகு பேசவில்லை. ஆனால் அவர் அப்படித்தான். அவர் வராததில் எனக்கு ஆச்சரியம் இல்லை. இது தான் எங்களுக்கு இடையேயான உறவின் அழகு என்கிறார் தீபிகா. ரன்வீர் சிங்கை காதலிப்பதற்கு முன்பு தீபிகா ரன்பிரை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











