இஷ்டமா, கஷ்டமா?: ரன்வீரை காதலிக்க ஒரேயொரு கன்டிஷன் போட்ட தீபிகா
மும்பை: நடிகர் ரன்வீர் சிங்கை காதலிக்க தீபிகா ஒரு கன்டிஷன் போட்டாராம்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தன் வாழ்வில் நடந்த மிகப்பெரிய நல்ல விஷயம் தீபிகாவை திருமணம் செய்தது என்கிறார் ரன்வீர்.
இந்நிலையில் காதல், திருமணம், ரன்வீர் பற்றி தீபிகா கூறியிருப்பதாவது,

காதல்
நான் 13 வயதில் இருந்து காதலித்துள்ளேன். ஒவ்வொரு முறையும் காதல் வருவதும் போவதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் தனியாக இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். நான் யாரையும் பொழுதுபோக்கிற்காக டேட் செய்ய மாட்டேன். அது ஓராண்டோ, இரண்டு ஆண்டுகளோ சின்சியராக இருப்பேன்.

காதல் முறிவு
எதை செய்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்று நினைப்பவள் நான். காதலில் 100 சதவீத ஈடுபாடு காட்டுவேன். 2012ம் ஆண்டில் என் வாழ்வில் காதல் முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு சீரியஸான காதல் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன். சும்மா கேஷுவலாக டேட் செய்ய நினைத்தேன்.

ரன்வீர் சிங்
2012ம் ஆண்டு நான் ரன்வீர் சிங்கை சந்தித்த போது நான் அவரிடம் கூறியதாவது, உங்களுக்கும் எனக்கும் இடையே ஏதோ தொடர்பு இருப்பதை என்னால் உணர முடிகிறது. எனக்கு உங்களை பிடித்துள்ளது. ஆனால் இதை ஓபன் ரிலேஷன்ஷிப்பாக வைக்க விரும்புகிறேன். எனக்கு வேறு யாரையாவது பிடித்தால் என் வழியில் செல்ல விரும்புகிறேன் என்றேன்.

சீரியஸ்
ரன்வீரிடம் கன்டிஷன் போட்டபோதிலும் நான் அவரை சீரியஸாக காதலிக்கத் துவங்கிவிட்டேன். எப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற அளவுக்கு எங்கள் உறவு வந்துவிட்டது என்கிறார் தீபிகா. 6 ஆண்டுகளாக ரன்வீரை காதலித்த பிறகு அவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் தீபிகா.


Click it and Unblock the Notifications











