ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராமுடன் நடிக்க விரும்பும் தீபிகா: டூ மச்
மும்பை: ஷாருக்கானின் குட்டி மகன் ஆப்ராமுடன் அடுத்த படத்தில் நடிக்க தீபிகாவுக்கு ஆசையாம்.
ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்த ஹேப்பி நியூ இயர் படம் ஹிட்டாகியுள்ளது. படம் ரிலீஸான 3 நாட்களிலேயே ரூ.108 கோடி வசூல் செய்தது.
இதனால் ஷாருக்கானும், படக்குழுவினரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில் இது குறித்து ஷாருக் கூறுகையில்,

ஆப்ராம்
படத்தில் என் இளைய மகன் ஆப்ராம் வந்தது பற்றி பலரும் என்னிடம் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். படத்தில் ஆப்ராம் அருமையாக காணப்படுகிறான்.

தீபிகா
என் மகன் பற்றி தீபிகா தான் சிறந்த கருத்து தெரிவித்துள்ளார். அவருக்கு அடுத்த படத்தில் என் மகனுடன் நடிக்க ஆசையாம்.

ஆர்யன்
என் மூத்த மகன் ஆர்யனுடன் நான் ஃபீஃபா வீடியோ கேம்ஸ் அல்லது கால்பந்து, கிரிக்கெட் விளையாடினேன். ஆப்ராமுடன் தலையை முட்டி விளையாடுகிறேன். அவன் என் ஐபேடில் விளையாடுகிறான்.

வெள்ளி விழா
படத்திற்கு வெள்ளி விழா கொண்டாடிய காலம் மலையேறிவிட்டது. என் படம் 6 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸானது. அதனால் முதல் வாரத்திலேயே அனைத்து மக்களும் பார்க்க உதவியாக உள்ளது என்றார் ஷாருக்கான்.


Click it and Unblock the Notifications











