»   »  தீபுவின் ஏக்கம்

தீபுவின் ஏக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவை நான் நிறைய நம்பினேன். ஆனால் என்னை அது சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல்ஏமாற்றம் தந்து விட்டது என்று தமிழிலிருந்து கன்னடத்திற்குத் தாவியுள்ள தீபு ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்.

சின்னப் பொண்ணாக இருந்தபோதே தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர்தான் தீபு. முதலில் என் மனவானில் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தார். ஆனால் அன்பு படத்தில் ஹீரோயினாக மாறினார்.

அதன் பிறகு தீபுவை ரொம்ப நாளாக ஆளைக் காணோம். திடீரென திருப்பதி படத்தில் அஜீத்தின் தங்கச்சியாககுடும்பப் பாங்காக வந்து போனார் தீபு. இப்படத்தில் தீபுவின் கேரக்டர் பேசப்பட்டாலும் கூட தொடர்ந்து படவாய்ப்புகள் வரவில்லை.

இதனால் கன்னடத்திற்குத் தாவினார் தீபு. தமிழில் கிளாமர் காட்டி நடிக்கத் தயாராக இருந்தும் கூட போதியஅளவில் வாய்ப்பு வராததால்தான் கடுப்பாகி கன்னடத்திற்குப் போனார் தீபு.

அங்கு முதல் படமான சித்துவில் கிளாமரில் பின்னி எடுத்தார் தீபு. இதையடுத்து அடுத்தடுத்து புதிய படவாய்ப்புகள் வந்ததால் பெங்களூரிலேயே டேரா போட்டு விட்டார்.

ஹனிமூன் எக்ஸ்பிரஸ் படத்திலும் தீபுவின் கிளாமர் கலக்கல் தொடர்ந்தது. ஆனால் அண்ணா தங்கி படத்தில் படுகுடும்பப் பாங்காக நடித்தார். இதனால் தொடர்ந்து குடும்பப் பாங்கான வேடங்கள் வர ஆரம்பித்தன.

எப்படி நடித்தால் என்ன, பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தால் போதும் என்ற நினைப்பில் குடும்பப் பாங்கானரோல்களை செய்யத் தொடங்கினார் தீபு. இப்போது அம்மணி அங்கு படு பிசியான நடிகை. அத்தோடு முகம்சுளிக்க வைக்காத கிளாமருடன் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறார்.

தெனாலிராமன், அவ்வா ஆகிய படங்களில் இப்போது நடித்து வருகிறார் தீபு. அப்படியானால் தமிழுக்குடாட்டாவா என்று தீபுவிடம் கேட்டால், தமிழில் நல்ல வாய்ப்புகளை எதிர்பார்த்திருந்தேன். ஆனால்வரவில்லையே.. வட்டாரம் படத்தில் கூட அதிசயா நடித்துள்ள கேரக்டரில் நான்தான் நடித்திருக்க வேண்டும்.ஆனால் இயக்குனர் சரண் கேட்ட தேதிகளில் நான் கன்னடத்தில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல்போனது.

தமிழில் படங்கள் கிடைத்தால் நடிக்க ஆசையாகத்தான் இருக்கிறேன். ஆனால் படம்தான் வரவில்லையே என்றுஏக்கப் பெருமூச்சை தூக்கி எறிகிறார். தீபுவின் ஏக்கத்தை சீக்கிரமாக போக்கி வையுங்கய்யா...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil