»   »  ஜோசியம் படுத்தும் பாடு இந்த தீபுவுக்கு வேற வேலையே இல்லை போலிருக்கிறது.கேரளத்தைச் சேர்ந்த இவர் 10வது படிக்கும்போதே அபரிமிதமான வளர்ச்சி கொண்டிருந்ததால் இவரை சினிமாவில்சேர்த்துவிட்டார் இவரது தாயார். அத்தோடு திவ்யலட்சுமி என்ற இவரது பெயரை தீபு என்று ஜோதிடர் யோசனைப்படி மாற்றினார்.அன்பு என்ற படத்தில் பாலா என்ற புதுமுக ஹீரோவுடன் நடித்த அந்தப் படம் ஊ..ஊ.. ஆனது.இதையடுத்து மலையாளம், கன்னடம், தெலுங்கு (இங்கு பக்கா கவர்ச்சி கேரக்டர்களில் நடித்துவிட்டு) என எல்லா பக்கமும் ஒருரவுண்டு அடித்துவிட்டு பெயரை ஜான்வி என்று மாற்றிக் கொண்டு மீண்டும் கோடம்பாக்கத்துக்கே வந்தார்.இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியிலும் அதே ஜோதிடர் இருந்தார். பெயர் மாறியதாலோ என்னவோ தமிழில் நிறையவாய்ப்புக்கள் வந்தன. சேரனின் தயாரிப்பில் பரத்துடன் அழகாய் இருக்கிறாய், பயமாக இருக்கிறது படத்திலும், விக்ராந்த் நடிக்கும் இளமை படத்திலும்,காக்க காக்க வில்லன் ஜீவன் ஹீரோவாக நடிக்கும் மது என்ற படத்திலும், சரத்குமாருக்கு ஜோடியாக காக்கி என்ற படத்திலும்நடித்துக் கொண்டிருக்கிறார்.இவ்வளவு சான்ஸ் கிடைத்திருக்கிறதே அதை வைத்துக் கொண்டு சந்தோஷப்பட வேண்டியது தானே.ஆசை யாரை விட்டது? பெயரை இன்னும் கொஞ்சம் நல்லபடியாக மாற்றியமைத்தால் இன்னும் நிறைய சான்ஸ வருமே என்றநினைத்த இவரது தாய்க்குலம் அதே ஜோசியரை மீண்டும் அணுக, அவரும் உடனே தாயக் கட்டைகளோடு களத்தில் இறங்கிபுதிதாக ஒரு பெயரைக் கண்டுபிடித்தார்.அது தான் திவ்யா.திவ்யலட்சுமியில் புறப்பட்டு தீபு, ஜான்வி வழியாக மீண்டும் திவ்யா வரைக்கும் வந்துவிட்ட இவர் மிக சீக்கிரமே ஒரிஜினல்பெயரான திவ்யலட்சுமிக்கு வந்துவிடுவார் போலும்.எல்லாம் ஜோசியம் படுத்தும் பாடு...

ஜோசியம் படுத்தும் பாடு இந்த தீபுவுக்கு வேற வேலையே இல்லை போலிருக்கிறது.கேரளத்தைச் சேர்ந்த இவர் 10வது படிக்கும்போதே அபரிமிதமான வளர்ச்சி கொண்டிருந்ததால் இவரை சினிமாவில்சேர்த்துவிட்டார் இவரது தாயார். அத்தோடு திவ்யலட்சுமி என்ற இவரது பெயரை தீபு என்று ஜோதிடர் யோசனைப்படி மாற்றினார்.அன்பு என்ற படத்தில் பாலா என்ற புதுமுக ஹீரோவுடன் நடித்த அந்தப் படம் ஊ..ஊ.. ஆனது.இதையடுத்து மலையாளம், கன்னடம், தெலுங்கு (இங்கு பக்கா கவர்ச்சி கேரக்டர்களில் நடித்துவிட்டு) என எல்லா பக்கமும் ஒருரவுண்டு அடித்துவிட்டு பெயரை ஜான்வி என்று மாற்றிக் கொண்டு மீண்டும் கோடம்பாக்கத்துக்கே வந்தார்.இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியிலும் அதே ஜோதிடர் இருந்தார். பெயர் மாறியதாலோ என்னவோ தமிழில் நிறையவாய்ப்புக்கள் வந்தன. சேரனின் தயாரிப்பில் பரத்துடன் அழகாய் இருக்கிறாய், பயமாக இருக்கிறது படத்திலும், விக்ராந்த் நடிக்கும் இளமை படத்திலும்,காக்க காக்க வில்லன் ஜீவன் ஹீரோவாக நடிக்கும் மது என்ற படத்திலும், சரத்குமாருக்கு ஜோடியாக காக்கி என்ற படத்திலும்நடித்துக் கொண்டிருக்கிறார்.இவ்வளவு சான்ஸ் கிடைத்திருக்கிறதே அதை வைத்துக் கொண்டு சந்தோஷப்பட வேண்டியது தானே.ஆசை யாரை விட்டது? பெயரை இன்னும் கொஞ்சம் நல்லபடியாக மாற்றியமைத்தால் இன்னும் நிறைய சான்ஸ வருமே என்றநினைத்த இவரது தாய்க்குலம் அதே ஜோசியரை மீண்டும் அணுக, அவரும் உடனே தாயக் கட்டைகளோடு களத்தில் இறங்கிபுதிதாக ஒரு பெயரைக் கண்டுபிடித்தார்.அது தான் திவ்யா.திவ்யலட்சுமியில் புறப்பட்டு தீபு, ஜான்வி வழியாக மீண்டும் திவ்யா வரைக்கும் வந்துவிட்ட இவர் மிக சீக்கிரமே ஒரிஜினல்பெயரான திவ்யலட்சுமிக்கு வந்துவிடுவார் போலும்.எல்லாம் ஜோசியம் படுத்தும் பாடு...

Subscribe to Oneindia Tamil

இந்த தீபுவுக்கு வேற வேலையே இல்லை போலிருக்கிறது.

கேரளத்தைச் சேர்ந்த இவர் 10வது படிக்கும்போதே அபரிமிதமான வளர்ச்சி கொண்டிருந்ததால் இவரை சினிமாவில்சேர்த்துவிட்டார் இவரது தாயார். அத்தோடு திவ்யலட்சுமி என்ற இவரது பெயரை தீபு என்று ஜோதிடர் யோசனைப்படி மாற்றினார்.

அன்பு என்ற படத்தில் பாலா என்ற புதுமுக ஹீரோவுடன் நடித்த அந்தப் படம் ஊ..ஊ.. ஆனது.

இதையடுத்து மலையாளம், கன்னடம், தெலுங்கு (இங்கு பக்கா கவர்ச்சி கேரக்டர்களில் நடித்துவிட்டு) என எல்லா பக்கமும் ஒருரவுண்டு அடித்துவிட்டு பெயரை ஜான்வி என்று மாற்றிக் கொண்டு மீண்டும் கோடம்பாக்கத்துக்கே வந்தார்.

இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியிலும் அதே ஜோதிடர் இருந்தார். பெயர் மாறியதாலோ என்னவோ தமிழில் நிறையவாய்ப்புக்கள் வந்தன.


சேரனின் தயாரிப்பில் பரத்துடன் அழகாய் இருக்கிறாய், பயமாக இருக்கிறது படத்திலும், விக்ராந்த் நடிக்கும் இளமை படத்திலும்,காக்க காக்க வில்லன் ஜீவன் ஹீரோவாக நடிக்கும் மது என்ற படத்திலும், சரத்குமாருக்கு ஜோடியாக காக்கி என்ற படத்திலும்நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வளவு சான்ஸ் கிடைத்திருக்கிறதே அதை வைத்துக் கொண்டு சந்தோஷப்பட வேண்டியது தானே.

ஆசை யாரை விட்டது? பெயரை இன்னும் கொஞ்சம் நல்லபடியாக மாற்றியமைத்தால் இன்னும் நிறைய சான்ஸ வருமே என்றநினைத்த இவரது தாய்க்குலம் அதே ஜோசியரை மீண்டும் அணுக, அவரும் உடனே தாயக் கட்டைகளோடு களத்தில் இறங்கிபுதிதாக ஒரு பெயரைக் கண்டுபிடித்தார்.

அது தான் திவ்யா.

திவ்யலட்சுமியில் புறப்பட்டு தீபு, ஜான்வி வழியாக மீண்டும் திவ்யா வரைக்கும் வந்துவிட்ட இவர் மிக சீக்கிரமே ஒரிஜினல்பெயரான திவ்யலட்சுமிக்கு வந்துவிடுவார் போலும்.

எல்லாம் ஜோசியம் படுத்தும் பாடு...

Read more about: deepu become divya now

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil