Devadarshini Daughter: ஒவர் கவர்ச்சி.. நடிகை தேவதர்ஷினியின் மகளா இப்படி?
சென்னை: பிரபல நட்சத்திர தம்பதிகளான தேவதர்ஷினி மற்றும் சேதன் மகள் நியதி கடம்பி இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டு இருக்கும் போட்டோஸ் இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.
சீரியல்கள் மூலம் நடிகையான அறிமுகமான நடிகை தேவதர்ஷினிக்கு சின்ன பாப்பா பெரிய பாப்பா காமெடி தொடர் இவருக்கு பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து, சினிமாவில் நடித்துவந்த தேவதர்ஷினி கிட்டத்தட்ட 90 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் அனைத்து விதமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
தேவதர்ஷினி மகள்: தேவதர்ஷினி நடிகர் சேத்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சேத்தன், அத்தி பூக்கள், மர்மதேசன், உதிரிப்பூக்கள் என 25 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சினிமாவில் சேத்தன் கலக்கி வருகிறார். குறிப்பாக விடுதலை 2 திரைப்படத்தில் மிகவும் மோசமான காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்ததை பார்த்து பெண்கள் அனைவரும் திட்டும் அளவிற்கு இவரின் நடிப்பு இருந்தது.

ஓவர் கவர்ச்சி: தேவதர்ஷினி சேத்தனைத் தொடர்ந்து இவர்களின் மகள் நியதி கடம்பியும் தற்போது திரைத்துறையில் அடி எடுத்து வைத்துள்ளார். இவர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 96 படத்தில், தேவதர்ஷினியின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து பேய் இருக்க பயமேன், ராணி த ரியல் ஸ்டோரி,அண்மையில் ஓடிடியில் வெளியான தலைவெட்டியான் பாளையம் வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நியதி கடம்பி டான்ஸ் நடனக்கலைஞர்களுடன் டான்ஸ் ஆடுவது, விதவிதமான போட்டோஷுட் நடத்துவது என மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் கருப்பு உடையில் கவர்ச்சியாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் ஓவர் கவர்ச்சி என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதே போல, அண்மையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் தேவதர்ஷினியுடன் நியதி கடம்பியும் வந்து இருந்தார். அப்போது அவர் உடை மிகவும் ஆபாசமாக அணிந்து வந்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலர் தேவதர்ஷினியின் மகளா இப்படி என கடுமையாக திட்டியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











