அம்மா ஜாடை லைட்டா வருதாம்.. தேவதர்ஷினியின் மகள் நியதி கவர்ச்சி உடையில் கலக்குறாங்களே!

சென்னை: காஞ்சனா படத்தில் காமெடி செய்துக் கொண்டிருந்த தேவதர்ஷினி தி ஃபேமிலி மேன் 2, கேரளா ஸ்டோரி என சர்ச்சை கதைகளில் நடிக்க ஆரம்பித்து விட்டார். 96 படத்தில் இளம் வயது ஜானுவின் தோழியாகவும் தேவதர்ஷினியின் யங் ஏஜ் கதாபாத்திரத்திலும் அவரது மகள் நியதி நடித்து அறிமுகமானார். அம்மா ஜாடை அப்படியே இருப்பதால் தான் இயக்குநர் பிரேம்குமார் அந்த படத்தில் நியதியை நடிக்க வைத்திருந்தார்.

இந்நிலையில், இப்போ ஒத்துக்குறேன் லைட்டா அம்மா ஜாடை வருது என அம்மா தேவதர்ஷினியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நியதி.

Devadarshini daughter shares recent selfie with her mom in instagram

சின்னத்திரையில் கலக்கி வந்த தேவதர்ஷினி சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நிலையில், அவருடைய மகளும் தற்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.

சேத்தன்: தேவதர்ஷினியின் கணவர் சேத்தன் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, கெளதம் மேனன் நடித்து வெளியான விடுதலை படத்தில் கொடூர போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுக்களை அள்ளினார். அவருடைய மனைவி தேவதர்ஷினி நடிப்பில் அசத்தி வரும் நிலையில், அடுத்ததாக மகள் நியதியும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அம்மாவை போல பொண்ணு: தாயை போல பொண்ணு.. நூலை போல சேலை என்கிற பழமொழிக்கு ஏற்றவாறு தேவதர்ஷினி போலவே அவரது மகள் நியதியும் அழகாக உள்ளார். 96 படத்தில் அம்மாவின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்த இவர் சமீபத்தில் மலையாளத்தில் ஊர்வசி நடிப்பில் வெளியான ராணி எனும் படத்திலும் நடித்திருந்தார் நியதி.

லியோ பாட்டுக்கு டான்ஸ்: அவ்வப்போது அம்மா தேவதர்ஷினியுடன் இணைந்து ரீல்ஸ் போட்டு வரும் நியதி சமீபத்தில் லியோ படத்தில் விஜய் பாடி நடனமாடிய "நான் ரெடி தான் வரவா" பாடலுக்கு அம்மாவுடன் சூப்பராக டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளினார்.

கவர்ச்சி உடையில்: கருப்பு கலர் மாடர்ன் உடையில் தேவதர்ஷினி போஸ் கொடுத்து நிற்க அவருக்கு பின்னாடி சிகப்பு நிற கவர்ச்சி உடையில் நியதி போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகளும், லைக்குகளும் குவிகின்றன. அம்மா ஜாடை லைட்டா இருக்கிறதை ஒத்துக்குறேன் என நியதி பதிவிட்ட நிலையில், இதையே இப்போதான் கண்டு பிடிக்கிறீயா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X