அடிக்கடி காதலருடன் திருப்பதிக்கு போகும் ஜான்வி கபூர்.. அங்கே தான் திருமணம் செஞ்சிக்கப் போறாரா?

திருப்பதி: நடிகை ஜான்வி கபூர் கடந்த ஆண்டு வெளியான தேவாரா படத்தின் முதல் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். மேலும் இவரது தந்தை ஜீ ஸ்டூடியோஸ் என்ற மிகப்பெரிய தயாரிப்பு நுறுவனத்தை வைத்துள்ள தயாரிப்பாளரான போனி கபூர் ஆவார். ஜான்வி கபூர் திருப்பதியில் இன்று அதாவது ஜனவரி 4ஆம் தேதி தரிசனம் செய்துள்ளார். அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அது குறித்து பார்க்கலாம்.

பாலிவுட் பிரபலமான ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் தனது முதல் படத்திலேயே, ஏகப்பட்ட கிளாமராக நடித்திருந்தார். தேவாரா படம் பாக்ஸ் ஆபிஸில் படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்றாலும், படத்தை தியேட்டரில் பலரும் பார்க்க முடிவெடுக்க ஒரே காரணம் ஜான்வி கபூர் தான். படம் ரிலிஸ்க்கு முன்னர், படக்குழு தரப்பில் ரிலீஸ் செய்யப்பட்ட லிரிக் வீடியோவில் ஜான்வி கபூர் ஓவர் கிளாமராக நடித்திருந்த மட்டும் இல்லாமல், ஓவர் கிளாமராக நடன அசைவுகளும் போட்டிருந்தார். இதனால் இவருக்காகவே பல ஆண் ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று படத்தை பார்த்தார்கள்.

janhvi kapoor tirupati

ஜான்வி கபூர் தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட பெண். என்னதான் சினிமாவில் செம பிசியாகவும் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றும் நபராக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை கொண்ட பெண்ணாகவே ஜான்வி இருந்து வந்துள்ளார். தனது அம்மாவின் பிறந்த நாளுக்கு கோவிலுக்குச் சென்று வழிபடுவதில் தொடங்கி, தனக்கு எப்போதெல்லாம் தோன்றுகின்றதோ அப்போதெல்லாம், உடனே கிளம்பி கோவிலுக்குச் செல்லும் பழக்கத்தைக் கொண்டவராக ஜான்வி இருக்கின்றார்.

janhvi kapoor tirupati

ஜான்வி கபூர்:: அந்த வகையில் இந்த ஆண்டினை நண்பர்களுடன் இணைந்து இரவு நேர பார்ட்டியில் செமையான குத்தாட்டம்போட்டு வரவேற்ற ஜான்வி கபூர், கடவுளை வணங்கி இந்த ஆண்டினைத் தொடங்க திருப்பதிக்கு வந்துள்ளார். வழக்கமாக பிரபலங்கள் வந்தால் மக்கள் மற்றும் பக்தர்கள் அவர்களை சூழ்ந்துவிடுவார்கள் என்பதால், பலரும் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, திருமலைக்கு நேரடியாக சாலை வழியைப் பின்பற்றி வாகனத்திலேயே சென்று வந்துவிடுவார்கள்.

janhvi kapoor tirupati

ஆச்சரியம்: ஆனால், ஜான்வி கபூர், தனக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் என திருமலையில் உள்ள படிக்கட்டுகள் வழியாக வெங்கடாசலபதியை தரிசிக்கச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் திருமலைக்குச் சென்ற பின்னர், பாவாடை தாவணி அணிந்து கடவுள் தரிசன்ம் செய்துள்ளார் ஜான்வி கபூர். அவருக்கு அங்கு சிறப்பு மரியாதை கோவில் நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்டது.

காதலர்: கடவுளை உள்ளே வணங்கிவிட்டு வெளியே வந்த ஜான்வி கபூர் , கருவறை உள்ள திசை நோக்கி, தரையில் படுத்து தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. பலரும் ஜான்வியின் பக்தியைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். பலர் ஜான்வி கபூருக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையும் என வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.மேலும் காதலர் சிகர் பஹரியாவுடன் தரிசனம் செய்தார். அடிக்கடி காதலருடன் அவர் திருப்பதியில் தரிசனம் செய்வதால் திருப்பதியில் இவர்களுக்கு திருமணம் நடக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

janhvi kapoor tirupati

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X