Iniya: ஆத்தாடி என்ன அழகு.. தேவயானி பொண்ணுனா சும்மாவா? பட்டுப்புடவையில் ஜொலிக்கும் இனியா!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை தேவயானி, தொட்டாச்சிணுங்கி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அஜித்துடன் இணைந்து காதல் கோட்டை படத்தின் வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சினிமாவில் படு பிஸியாக இருந்த காலத்தில் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதில் மூத்த மகள் இனியா, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தன்னுடைய திறமையால், வசீகரமான குரல் வளத்தால் தனக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கினார். சரிகமபாவில் அடுத்தடுத்த கடத்தில் திறம்பட பாடி வந்த இனியா, நிச்சயமாக பைனலுக்கு வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி நேரத்தில் இறுதிவாய்ப்பு இனியா நழுவவிட்டார்.

devayani iniya photo
Photo Credit:

தேவயானி மகள்: இனியா சரிகமபா நிகழ்ச்சியில் பட ஆரம்பித்த பிறகு, தனியாக இன்ஸ்டாகிராமில் பக்கத்தை தொடங்கி அதில், புகைப்படங்கள், வீடியோ கிளிப்புகளை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், இனியா தற்போது, பகிர்ந்து இருக்கும் போட்டோ இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. அந்த படத்தில், இனியா மயில் நிற பட்டுப் புடவையில், கல்யாண பெண்ணைப் போல் முழுமையாக அலங்கரித்து, நகையுடன் அழகான பாரம்பரிய தோற்றத்தில் இருக்கிறார். அவரை பார்ப்பதற்கு அம்மா தேவயானி போலவே இனியா இருப்பதால் உச்சி கொட்டி வர்ணித்து வருகின்றனர். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், "கண்ணுப்படப் போகுது... சுத்தி போட்டுக்கோங்க" என்றும், அம்மாவைப் போலவே அழகு என்றும், "திரை உலகுக்கு வரப்போகிறீங்களா?" என பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

அம்மாவை போல அழகு: இனியாவின் இந்த பாரம்பரிய லுக், தேவயானி ரசிகர்களுக்கிடையே பெரும் பேச்சுப் பொருளாக மாறி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேவயானியின் மகள் என்பதாலேயே அல்லாமல், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் இனியாவின் அடுத்த படி என்ன என்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X