Devayani daughter: நானி பட ரீமேக்கில் தேவயானி மகள் நடிக்கப் போகிறாரா?.. செமையா இருக்குமே!

சென்னை: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நானியின் தயாரிப்பு நிறுவனமான வால் போஸ்டர் சினிமா ரிலீஸ் செய்த Court: State vs A Nobody திரைப்படம் 5 கோடி ரூபாயில் உருவாகி 58 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தையும் இயக்குநருமான தியாகராஜன் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து இயக்கிய அந்தகன் திரைப்படம் வெற்றிப் படமாக மாறியது.

Devayani daughter may debut in Nani s Court State vs A Nobody movie buzz trending
Photo Credit:

பிரசாந்த் அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், நடிகை தேவயானி மகளை ஹீரோயினாக தியாகராஜன் இந்த படத்தில் அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சரிகமபவில் கலக்கல்: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப ஷோவில் நடிகை தேவயானி மகள் பாடல்களை பாடி அசத்தி வருகிறார். சீக்கிரமே அவர் சினிமாவில் அம்மாவை போலவே ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான சரியான நேரம் அமைந்து விட்டதாக கூறுகின்றனர். கிளாமர் உடைகளை உடுத்தாமல் பாரம்பரிய உடைகளை அணிந்துக் கொண்டு அம்மா தேவயானி போல அம்சமாக ஒவ்வொரு வாரமும் போட்டியில் கலந்துக்கொண்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இனியா சீக்கிரமே ஹீரோயினாகப் போகிறாராம்.

Devayani daughter may debut in Nani s Court State vs A Nobody movie buzz trending
Photo Credit:

கோர்ட் பட ரீமேக்கில்: இயக்குநர் ராம் ஜகதீஷ் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் பிரியதர்ஷி புலிகொண்டா, சாய் குமார் நடிப்பில் இந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி வெளியான கோர்ட் திரைப்படம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. ஓடிடியில் வெளியான அதன் தமிழ் வெர்ஷனையும் பல ஓடிடி ரசிகர்கள் பார்த்து கொண்டாடினர். இந்நிலையில், அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தியாகராஜன் வாங்கியுள்ளதாகவும் அந்த படத்தில் தான் தேவயானி மகள் இனியா ஹீரோயினாக அறிமுகமாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் பிரசாந்த் உடன் கல்லூரி வாசல் மற்றும் அப்பு உள்ளிட்ட படங்களில் தேவயானி ஜோடி போட்டு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவயானி மகளுக்கு ஜாக்பாட்: தெலுங்கில் மெருவள்ளி ஜாபிலி கதாபாத்திரத்தில் இளம் நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் தான் தேவயானி மகள் இனியா அறிமுகமாகப் போகிறார் என்கின்றனர். ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில், படக்குழுவினர் அனைத்து அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் வெற்றிப் பெற்ற இந்த படத்தில் தேவயானி மகள் அறிமுகமானால் சூப்பராக இருக்கும் என்றும் தெலுங்கில் நடித்த ஸ்ரீதேவியும் சிறப்பாக நடித்திருப்பார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X