தேவயானி மகளா இது? மளமளவென வளர்ந்து அப்படியே அம்மாவை போல இருக்காரே.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
சென்னை: நடிகை தேவயானியின் மூத்த மகள் 'சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக பாட்டுப்பாடி அசத்தி அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். அதே போல தேவயானியின் இளைய மகள் பிரியங்கா அம்மாவை மிஞ்சும் அழகில் விதவிதமான போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் இவரை கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். தேவயானி நடித்த காதல் கோட்டை, சூர்ய வம்சம், மறுமலர்ச்சி, நீ வருவாய் என, தெனாலி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றன.

தேவயானி மகள்: நடிகை தேவயானி ராஜகுமாரன் இயக்கிய நீ வருவாய் என என்ற படத்தை நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் இனியா, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு பாடி அனைவரையும் அசத்தினார். பிரபலமான நடிகையின் மகளாக இருந்த போது, எந்தவிதமான சிபாரிசும் இல்லாமல் இனியா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடினார்.

பிரியங்கா : நடிகை தேவயானியின் இளைய மகள் பிரியங்கா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு நடிகையாக வேண்டும் என்பது தான் ஆசை, அதற்கான சரியான வாய்ப்புக்காக பிரியங்கா காத்துக்கொண்டு இருக்கிறாள். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோவை போட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர் அழகி என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிரியங்காவிற்கு நிச்சயம் சினிமாவில் ஒரு நல்ல இடம் உண்டு. தற்போது ராஜகுமாரன், 'இமயா நேச்சுரல்ஸ்' என்ற பெயரில் 100 சதவீதம் இயற்கை முறையில் அழகுசாதனப் பொருட்களை உருவாக்கி, அவற்றைச் சந்தைப்படுத்தும் ஒரு புதிய பிசினசை தொடங்கி நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











