அய்யோ அதை மட்டும் மறக்கவே முடியாது.. கணவரை பற்றி தேவயானி ஓபன் டாக்.. என்ன சொன்னாங்க?
சென்னை: இயக்குநரும், தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் தமிழில் சில படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். அந்தப் படங்களில் நீ வருவாய் என படம் மட்டும்தான் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இப்போது சின்மாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கியிருக்கும் அவர் சமீப காலமாக நிறைய பேட்டிகளை கொடுத்துவருகிறார். அந்தப் பேட்டிகள் சர்ச்சையாகிவிடுவது வழக்கம். இந்நிலையில் தனது கணவர் பற்றி தேவயானி பேசியிருக்கும் விஷயம் இப்போது ஷோசியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் விக்ரமன். அவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ராஜகுமாரன். பல விக்ரமன் படங்களில் பணியாற்றிவிட்டு நீ வருவாய் என படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதனையடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கினார். அது பெரிய வரவேற்பை பெறவில்லை. முதல் இரண்டு படங்களுமே சுமார் வரவேற்பைதான் பெற்றன. அதேசமயம் அந்தப் படங்கள்தான் தேவயானிக்கும், ராஜகுமாரனுக்கும் காதல் உருவாக காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பேரும் எதிர்ப்பை மீறி திருமணம்: தேவயானியும், ராஜகுமாரனும் காதலிக்கும் விஷயம் திரைத்துறையில் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுக்க; தேவயானி வீட்டுக்கு அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. இதனால் இந்தக் காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் ராஜகுமாரனை தீவிரமாக காதலித்த அவர்; வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகள்கள் இரண்டு மகள்களில் ஒருவர் பாடல்கள் மூலம் ஃபேமஸ் ஆகியிருக்கிறார். ஹீரோயினாகவும் கமிட்டாகியிருக்கிறார்.
நடிகராக ராஜகுமாரன்: இது ஒரு பக்கம் இருக்க திருமணத்துக்கு பிறகு ஒரு படத்தை மட்டுமே ராஜகுமாரன் இயக்கினார். தேவயானியோ நடிப்பதை நிறுத்தவில்லை. இயக்கத்திலிருந்து ஒதுங்கிய ராஜகுமாரன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுவும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. குறிப்பாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் தன்னுடைய கணவர் அப்படி கிண்டல் செய்யப்பட்டதில் தனக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லை எனவும் தேவயானி கூறியிருந்தார்.
ராஜகுமாரன் கொடுக்கும் பேட்டிகள்: சூழல் இப்படி இருக்க சமீப காலமாக பல சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்துவருகிறார். அப்படி அவர் கொடுக்கும் பேட்டியில் பேசும் விஷயங்கள் சர்ச்சையை கிளப்புகின்றன. முதலில் மகேந்திரன், கமல்ஹாசன் குறித்து பேசி சர்ச்சையை கிளப்பிய அவர்; தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார் அதேபோல் எஸ்கே நடிப்பில் வெளியாகி பிரமாண்ட ஹிட்டடித்த அமரன் படத்தையும் குறையே சொல்லியிருந்தார்.
தேவயானி பேட்டி: இந்நிலையில் நடிகை தேவயானியின் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில் அவரிடம், சூர்யவம்சம் படம் குறித்தும், அதில் மணிவண்ணனை ராஜகுமாரன் கலாய்க்கும் சீன் குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'சூர்யவம்சம் படமே எப்போதும் மறக்க முடியாடஹ் ஒரு எவர்க்ரீன் திரைப்படம். அதிலும் இந்த சீனும் மறக்க முடியாத சீன். அந்த சீனில் நடிக்க வேண்டியவர் அன்றைக்கு வரவில்லை. எனவே இவரே நடித்துவிட்டார். எப்போதுமே என்னால் அந்த சீனை மறக்க முடியாது' என்றார்.


Click it and Unblock the Notifications
