காதலில் மம்தா மோகன்தாஸ்?

By Staff
Click here for more images
மலையாளத்திலிருந்து தமிழ் மூலமாக தெலுங்குக்குப் போய் விட்ட மம்தா மோகன்தாஸுக்கும், தெலுங்குத் திரையுலகின் இளம் இசைப் புயல் தேவி ஸ்ரீபிரசாத்துக்கும் காதல் முற்றியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் 'லேது நைனா' என்று மறுக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத்.

மலையாளத்து மம்தா, தமிழில் சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்து அறிமுகமானார். ஆனால் அவரைத் தேடி பிறகு ஒரு படமும் வரவில்லை. இதனால் தெலுங்குக்குப் போனார். அங்கு இப்போது கை நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி காட்டி நடிக்கத் தயங்காதவர் மம்தா. மலையாளத்தில் அவர் சுரேஷ்கோபியுடன் இணைந்து நடித்த லங்கா படத்தில் கவர்ச்சியை தாராளமாக வழங்கியிருந்தார். கோபியுடன் நெருக்கமாக இணைத்தும் பேசப்பட்டார்.

நடிப்போடு அவரது வாய்ஸும் பேசப்பட்டதால் தெலுங்கில் பாடவும் அழைப்பு வந்தது. விளைவு இப்போது தெலுங்கில் முன்னணியான பின்னணிப் பாடகியாகவும் ஆகி விட்டார் மம்தா.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் சில பாடல்களை பாடியபோது, மம்தாவின் குரலில் மயங்கிய தேவி ஸ்ரீபிரசாத், தொடர்ந்து அவரை தனது படங்களில் பாட வைத்து வருகிறார். இதையடுத்து இருவரையும் இணைத்து ஏராளமான கிசுகிசுக்கள் தாராளமாக வர ஆரம்பித்து விட்டன.

இருவருக்கும் இடையே நெருக்கமான காதல் மலர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தேவி ஸ்ரீபிரசாத்திடம் கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்தார்.

இது நல்ல ஜோக். எனது படங்களில் அவர் பாடினார் என்பதற்காக இருவரையும் இணைத்து பேசுவது தவறு. எனக்கும், அவருக்கும் இடையே தொழில் ரீதியிலான தொடர்புதான் உள்ளதே தவிர வேறு எதுவும் இல்லை. மம்தா நல்ல பாடகி. ஆனால் எனது காதலி அல்ல என்றார்.

முன்னதாக சார்மியுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கைப் போலவே தமிழிலும் பிசியாக இருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். விக்ரமின் கந்தசாமி, ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம், விஜய்யின் புதிய படம் ஆகியவற்றில் தேவிதான் இசைத் தாலாட்டு.

More from Filmibeat

Read more about: devi sri prasad mamta mohandoss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X