கவர்ச்சி 'வெடிகுண்டு' தேவ்ஷி கந்தூரியின் சரவெடி தீபாவளி!
மும்பை: சதீஷ் ரெட்டியின் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தின் கவர்ச்சி கதகளி நாயகி தேவ்ஷி கந்தூரி, தனது ரசிகர்களுக்காக பட்டாசுகளுடன் படுத்துப் புரண்டு விதம் விதமாக போஸ் கொடுத்து தனது ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசளித்துள்ளார்.

பாலிவுட்டுக்கு வந்த புது கவர்ச்சி குண்டு
பாலிவுட்டில் ஏகப்பட்ட கவர்ச்சி நாயகிகள் கொடியேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் புதிதாக வந்தவர்தான் தேவ்ஷி கந்தூரி. உரித்து வைத்தக் கோழியைப் போல இவரும் கவர்ச்சியில் கதி கலக்க ஆரம்பித்துள்ளார்.

வீணா மாலிக்குடன் கவர்ச்சி மோதல்
வீணா மாலிக் கவர்ச்சியில் புதுப் புரட்சி படைக்கக் காத்திருக்கும் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில்தான் தேவ்ஷி கந்தூரியும் 'கவர்ச்சி தந்தூரி'யாக களம் குதித்துள்ளார்.

உள்ளங்களில் 'கந்தகச்' சூடு
தற்போது தீபாவளி வந்திருப்பதால் தனது ரசிகர்களை உசுப்பேற்றவும், தீபாவளிப் பரிசாகவும், வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிக உள்ளங்களில் கந்தகச் சூட்டையும், கவர்ச்சி கதகதப்பையும் ஏற்றியுள்ளார் தேவ்ஷி.

'பாடி'யெல்லாம் சரவெடி
உடம்பெல்லாம் சரவெடிகளைப் போட்டுப் போர்த்தியபடி, தக்கனூண்டு உடை மட்டுமே அணிந்து படு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்துள்ளார் தேவ்ஷி. பட்டாசு ஆடையுடன் அவர் படுத்திருக்கும் போஸைப் பார்த்தாலே திரிகளுக்கு திரில்லாகி டமால் டுமீல் என வெடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

என்னை நினைத்து பட்டாசு வெடியுங்கள்
ஏன் இப்படி ஒரு போஸ் என்று கந்தூரியிடம் கேட்டால், எனக்கு சர்ப்ரைஸ் பிடிக்கும். மேலும் எனது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் வித்தியாசமான கிப்ட் கொடுக்க ஆசைப்பட்டேன். அதனால்தான் இப்படி போஸ் கொடுத்தேன். இந்த புகைப்படங்கள் இடம் பெற்ற ஸ்டிக்கர் ஒட்டிய பட்டாசு பாக்கெட்களை ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிசாக அளிக்கப் போகிறேன். என்னை நினைத்து அவர்கள் பட்டாசுகளை வெடிக்கட்டும்.

பாத்து வெடிங்க, பத்ததிரமா வெடிங்க
அனைவரும் தீபாவளியை இனிமையாக, சந்தோஷமாக கொண்டாடுங்க. பார்த்து வெடிங்க, பத்திரமா வெடிங்க என்று முடித்தார் தேவ்ஷி..
தேவ்ஷி கொடுத்துள்ள போஸைப் பார்த்தால் பட்டாசு வெடிக்கனும் போலவா தோணும்....!


Click it and Unblock the Notifications











