நான் மாமியாருக்கு ஏற்ற மருமகள்- தேவயானி நான் எனது மாமியாருக்கு ஏற்ற மருமகளாகத் தான் நடந்துள்ளேன். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கோலங்கள்தொடரின் புகழை கெடுப்பதற்காகத் தான் எனது மாமியாரை யாரோ தூண்டி விட்டிருக்கிறார்கள் என்று நடிகை தேவயானிகூறியுள்ளார்.கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகை தேவயானி தனது வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இயக்குனர்ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பிறகு ராஜகுமாரனும் அட்ரஸ் இல்லாமல் போனார். தேவயானிக்கும் வாய்ப்புகள் மங்கத் தொடங்கியது. இந்தசமயத்தில் தான் தேவயானிக்கு கோலங்கள் டிவி தொடர் கைகொடுத்தது.இந்த தொடரில் மாமியாரின் கொடுமைக்கு ஆளாகும் அப்பாவி மருமகளாக தேவயானி நடித்து வருகிறார். இதனால் பெண்கள்மத்தியில் தேவயானிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. நிறைய பெண்கள் தங்களது வீட்டு குடும்பப் பிரச்சினையை தீர்த்துவைக்கும் படி தேவயானியிடம் லெட்டர் போட்டு ஆலோசனை கேட்கிறார்களாம்.இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தேவயானி, ஒரு வார இதழில் வாசகியர்களின் குடும்பத் தகராறு தொடர்பானகேள்விகளுக்கு பதிலளித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.ஆனால் இப்போது தேவயானி குடும்பத்திலேயே பெரும் பிரச்சினை வெடித்துள்ளது. அவருக்கும், அவரது மாமியாருக்கும்இப்போது பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதை தீர்க்க முடியாமல் தேவயானி தவித்து வருகிறார்.தேவயானியின் மாமியாரும், ராஜகுமாரனின் தாயுமான அய்யம்மாள், அந்தியூர் கவுந்தப்பாடியில் கடந்த 30 வருடங்களாகபலகாரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.அவர், தன்னை தேவயானி மரியாதையாக நடத்தவில்லை என்றும், கொடுமைப்படுத்தி தன்னை மகனிடம் இருந்து பிரித்துவிட்டார் என்றும் சமீபத்தில் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.இது குறித்து தேவயானியிடம் கேட்டோம்: எனது மாமியாரை நான் தாயை போன்று தான் மதிக்கிறேன். அவருக்கு ஏற்றமருமகளாகத் தான் இவ்வளவு நாளும் நடந்து வந்துள்ளேன். மாமியாரை கொடுமைப்படுத்தும் அளவுக்கு நான் மோசமானமருமகள் அல்ல. தனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை என்று கூறித்தான் கிராமத்திற்கு சென்றார். நானும் எனது கணவரும் அவருக்குதேவையான உதவிகளை செய்து வருகிறோம். மாதத்திற்கு ரூ. 3,000 அவருக்கு அனுப்பி வைக்கிறேன்.இப்படிப்பட்ட நிலையில் அவர் என் மீது அபாண்டமாக புகார் கூறியிருப்பதைப் பார்த்தால் கோலங்கள் டிவி தொடரின்புகழைக் கெடுப்பதற்காக யாரோ அவரைத் தூண்டி விட்டது போலத்தான் இருக்கிறது. இதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லைஎன்றார்.வழக்கமாக நடிகைகளின் குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையே தான் பிரச்சினை வெடிக்கும். ஆனால்தேவயானியின் குடும்பத்திலோ மாமியார், மருமகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

By Staff

நான் எனது மாமியாருக்கு ஏற்ற மருமகளாகத் தான் நடந்துள்ளேன். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கோலங்கள்தொடரின் புகழை கெடுப்பதற்காகத் தான் எனது மாமியாரை யாரோ தூண்டி விட்டிருக்கிறார்கள் என்று நடிகை தேவயானிகூறியுள்ளார்.

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகை தேவயானி தனது வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இயக்குனர்ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு ராஜகுமாரனும் அட்ரஸ் இல்லாமல் போனார். தேவயானிக்கும் வாய்ப்புகள் மங்கத் தொடங்கியது. இந்தசமயத்தில் தான் தேவயானிக்கு கோலங்கள் டிவி தொடர் கைகொடுத்தது.

இந்த தொடரில் மாமியாரின் கொடுமைக்கு ஆளாகும் அப்பாவி மருமகளாக தேவயானி நடித்து வருகிறார். இதனால் பெண்கள்மத்தியில் தேவயானிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. நிறைய பெண்கள் தங்களது வீட்டு குடும்பப் பிரச்சினையை தீர்த்துவைக்கும் படி தேவயானியிடம் லெட்டர் போட்டு ஆலோசனை கேட்கிறார்களாம்.

இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தேவயானி, ஒரு வார இதழில் வாசகியர்களின் குடும்பத் தகராறு தொடர்பானகேள்விகளுக்கு பதிலளித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

ஆனால் இப்போது தேவயானி குடும்பத்திலேயே பெரும் பிரச்சினை வெடித்துள்ளது. அவருக்கும், அவரது மாமியாருக்கும்இப்போது பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதை தீர்க்க முடியாமல் தேவயானி தவித்து வருகிறார்.

தேவயானியின் மாமியாரும், ராஜகுமாரனின் தாயுமான அய்யம்மாள், அந்தியூர் கவுந்தப்பாடியில் கடந்த 30 வருடங்களாகபலகாரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

அவர், தன்னை தேவயானி மரியாதையாக நடத்தவில்லை என்றும், கொடுமைப்படுத்தி தன்னை மகனிடம் இருந்து பிரித்துவிட்டார் என்றும் சமீபத்தில் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.


இது குறித்து தேவயானியிடம் கேட்டோம்: எனது மாமியாரை நான் தாயை போன்று தான் மதிக்கிறேன். அவருக்கு ஏற்றமருமகளாகத் தான் இவ்வளவு நாளும் நடந்து வந்துள்ளேன். மாமியாரை கொடுமைப்படுத்தும் அளவுக்கு நான் மோசமானமருமகள் அல்ல.

தனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை என்று கூறித்தான் கிராமத்திற்கு சென்றார். நானும் எனது கணவரும் அவருக்குதேவையான உதவிகளை செய்து வருகிறோம். மாதத்திற்கு ரூ. 3,000 அவருக்கு அனுப்பி வைக்கிறேன்.

இப்படிப்பட்ட நிலையில் அவர் என் மீது அபாண்டமாக புகார் கூறியிருப்பதைப் பார்த்தால் கோலங்கள் டிவி தொடரின்புகழைக் கெடுப்பதற்காக யாரோ அவரைத் தூண்டி விட்டது போலத்தான் இருக்கிறது. இதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லைஎன்றார்.

வழக்கமாக நடிகைகளின் குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையே தான் பிரச்சினை வெடிக்கும். ஆனால்தேவயானியின் குடும்பத்திலோ மாமியார், மருமகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X