கடற்கரையில் கவர்ச்சியை புரண்டோட விடும் ரஜினியின் ரீல் மகள்!
சென்னை : தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக உள்ளவர் நடிகை தன்ஷிகா.
கபாலியில் ரஜினிக்கு மகளாக நடித்து மாஸ் காட்டிய இவருக்கு இப்போது அரை டஜன் திரைப்படங்கள் வெளியாக காத்துக் கொண்டுள்ளன.
இதுவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படங்களில் நடித்து வந்த தன்ஷிகா இப்போது கவர்ச்சியை கடற்கரையில் புரண்டோட வைக்கும் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பட்டையைக் கிளப்பி
ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த பேராண்மை திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகை தன்ஷிகா அதன்பிறகு மாஞ்சா வேலு, நில் கவனி செல்,அரவான், பரதேசி, யா யா, திறந்திடு சீசே ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.

கதைக்கு முக்கியத்துவம்
இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்ற கபாலியில் ரஜினிக்கு மகளாக நடித்து மாஸ் காட்டினார். அதன்பிறகு பலரும் ரஜினியின் மகளாகவே இவரை பார்த்தனர். ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் தராமல் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

விவசாயத்தை
தமிழில் மிகவும் பிரபலமாக உள்ள தன்ஷிகா தெலுங்கு,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விவசாயத்தை பற்றிய முக்கிய பிரச்சினைகளை கையில் எடுத்துள்ள இந்த படம் மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது.

பார்த்திராத அளவிற்கு
அருண் விஜய்யின் சீனம், கித்னா, யோகிதா,வாலுஜாட,லாபம் ஆகிய படங்கள் தன்ஷிகாவுக்கு அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்க இதுவரை இழுத்து போர்த்திக்கொண்டு குடும்ப பாங்காக கதைகளில் நடித்து வந்த இவர் இப்பொழுது முன்னழகு மொத்தமும் தெரிய கவர்ச்சியில் தாறுமாறு செய்து வருகிறார். சமீபத்தில் பீச் போட்டோஷூட் நடத்தி அதில் கவர்ச்சியை கண்டபடி கரை புரண்டோட விட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார். இதுவரை பார்த்திராத அளவிற்கு தன்ஷிகா கவர்ச்சியில் உள்ள இந்த படங்களைப் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.


Click it and Unblock the Notifications











