அமலாபால், காஜோல், மோனல் கஜ்ஜார்... விஐபி 2 வில் தனுஷுக்கு ஸீன் இருக்குமா?
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த நேரம் அது... நய்யாண்டி, மரியான் என அடி மேல் அடி வாங்கிய தனுஷ் சொந்தத் தயாரிப்பில் செதுக்கியதுதான் விஐபி. குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின்னர் அந்த அளவுக்கு பிளாக்பஸ்டர் எதுவும் கிளிக் ஆகவில்லை. இப்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகி வருகிறது விஐபி 2.

விஐபி யில் இருந்த அத்தனை ஆர்ட்டிஸ்ட்களும் இருக்கிறார்கள். இவர்கள் தவிர வில்லியாக காஜோல் நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறாராம். இது தவிர ஒரு பாடலுக்கு ஆட முன்னணி ஹீரோயின்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. போகிற போக்கை பார்த்தால் தனுஷுக்கே படத்தில் ஸீன் இருக்குமா என்ற சந்தேகம் வருகிறது.
அது சரி... தயாரிப்பு தாணுதானே...? பண்ணுங்க... பண்ணுங்க... நஷ்டம் வராம பார்த்துக்குங்க!


Click it and Unblock the Notifications











