தனுஷ் - மிருணாள் தாகூர் சேர வேண்டிய படம்.. நடக்கும் பிரச்னை என்ன?

சென்னை: சீதாராமம் படத்தில் நடித்து ஃபேமஸ் ஆனவர் மிருணாள் தாகூர். அவரது அழகும்,திறமையும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதனையடுத்து பாலிவுட்டில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு பலனாக வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க அவரும், நடிகர் தனுஷும் காதலிக்கிறார்கள் என்றும்; விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்றும் தகவல்கள் பரவின. அது பின்னர் வதந்தியென தெரியவந்தது.

மிருணாள் தாகூருக்கு சீதாராமம் பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாகதென்னிந்திய மொழிகளில் அதீத கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கவனம் பாலிவுட்டிலேயே தொடர்ந்தது. அதன் பலனாக தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஹிட்டோ, தோல்வியோ அவரது மார்க்கெட் சீராகவே இருக்கிறது என திரைத்துறையினர் சொல்கிறார்கள். தென்னிந்திய மொழிகளை பொறுத்தவரை அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.

Dhanush and Mrunal Thakur to Team Up for New Film Shooting Delayed Due to Script Changes
Photo Credit:

கிசுகிசுவுக்கு விதை: அவரது பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை சிங்கிளாகவே வெளியே காட்சி தருகிறார். ஆனால் சமீபமாக அவருக்கும், நடிகர் தனுஷுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி டேட்டிங் எல்லாம் செல்கிறார்கள் என்று பேசப்பட்டது. மறுபக்கம் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. இருந்தாலும் தனுஷுடனான கிசுகிசுதான் தொடர்ந்து பரவியது. அதுமட்டுமின்றி தனுஷின் அக்காவையும் இன்ஸ்டாகிராமில் திடீரென்று ஃபாலோ செய்ய தொடங்கினார்.

Also Read
ரவி மோகனை பிரிந்த கெனிஷா பின்னணி பாடகி மட்டுமா?.. ஒரு படத்தில் நடிச்சிருக்காங்க.. அது எது தெரியுமா?
ரவி மோகனை பிரிந்த கெனிஷா பின்னணி பாடகி மட்டுமா?.. ஒரு படத்தில் நடிச்சிருக்காங்க.. அது எது தெரியுமா?

திருமணம் வரை சென்ற கிசுகிசு: இதையெல்லாம் வைத்து அவர்களுக்கு திருமணம் நடப்பது உறுதிதான் என அனைவருமே சொல்கிறார்கள். ஆனால் மிருணாளோ அதற்கெல்லாம் பெரிதாக ரியாக்ட் செய்துகொள்ளவில்லை. தன்னுடைய கரியரில் முழுக்க முழுக்க பார்வையை செலுத்தியிருக்கிறார். தனுஷும் இதுகுறித்து எந்த ரியாக்ட்டும் செய்துகொள்ளவில்லை. அனைத்துக்கும் உச்சக்கட்டமாக இரண்டு பேருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

மறுத்த மிருணாள்: கிசுகிசுக்கள் கிளம்பி அதுவாகவே அடங்கிவிடும் என்ற நினைப்பில் இருந்தார் மிருணாள். ஆனால் இவர் குறித்து கிசுகிசு தொடர்ந்து பரவியது. இதனால் கடுப்பான அவர் தான் அளித்த ஒரு பேட்டியில் அதெல்லாம் சுத்தமான பொய் என்று உறுதிப்படுத்தினார். அதேசமயம் தனுஷுடன் சேர்ந்து நடிக்க ஆசை; அவர் தொழிலில் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என்றும் புகழ்ந்திருந்தார். இரண்டு பேரும் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

சேரும் படத்தில் பிரச்னை: சூழல் இப்படி இருக்க தனுஷும், மிருணாள் தாகூரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்றும்; அந்தப் படத்தை தனுஷே இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அந்த தகவலோடு சரி; அடுத்தக்கட்டத்துக்கு படம் நகரவில்லை. இந்நிலையில் மிருணாளை வைத்து ஃபோட்டோஷூட் எல்லாம் முடிந்தது என்றும்; இருப்பினும் சில காரணங்களால் அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக இப்போது கூறப்படுகிறது. கதையில் சில மாற்றங்களை தனுஷ் செய்யவிருப்பதால் இந்த தாமதம் என்றும் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X