கேரவனுக்குள் அத்துமீறிய இயக்குநர்.. தனுஷ் பட நடிகைக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை..!

ஹைதராபாத்: நடிகைகளுக்கு பாலியல் தொல்லை எங்கு நடக்கிறதோ இல்லையோ படப்பிடிப்புத் தளத்தில் நடந்துவிடுகிறது என்பதற்கு மற்றொரு சம்பவத்தை பாதிக்கப்பட்ட நடிகை கூறியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான ஹேமா கமிட்டி விசாரணை அறிக்கை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதில் ஒரு நடிகர், படப்பிடிப்புத் தளத்தில் கை கழுவும் இடத்தில் நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் எனக் கூறினார். இப்படியான நிலையில் தனுஷ் பட நடிகை தனக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் குறித்து பகிர்ந்துள்ளார்.

பெரும்பாலான திரையுலகில் ஒரு பெண் நடிகையாக நடிக்க முயற்சி செய்கிறார் என்றால், அந்த பெண்ணை எளிதாக தங்களது பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் போல. நாம் தான் அந்த பெண்ணை அறிமுகம் செய்கிறோம், நாம் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறோம், எனவே, அந்த பெண்ணை நமது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற எண்ணத்தில் இப்போதும் இந்தியா முழுவதும் உள்ள திரையுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படியானவர்களால் வாழ்க்கையை இழந்த பெண்களும் நடிகைகளும் ஏராளம். சமீபத்தில் கூட சின்னத்திரை நடிகை ஒருவரின் அந்தரங்க வீடியோ இணையத்தில் பரவியது. அதில் மிகவும் மோசமானதாக, இருந்த விஷயம், அந்த பெண்ணின் ஆடையைக் கழட்ட சொன்ன வக்கிர புத்தி. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அந்த பெண்ணைத்தான் குற்றம் கூறினார்களே தவிர, பெண்ணிடம் மிகவும் மோசமாக பேசியவனை, அதை வீடியோவாக எடுத்து அதை தற்போது பகிர்ந்தவன் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் மிகவும் குறைவு.

Dhanush Idly Kadai Actress Shalini Pandey Shares Her Worst Experience in Shooting Spot

பாலியல்: பாலியல் தொல்லை என்பது, நடிகைகளுக்கு வளரும் வரை இருந்து கொண்டுதான் உள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் நடிகைகள் உச்ச நடிகைகளாக மாறிவிட்டால், அப்போது அந்த இயக்குநர்களும், நடிகர்களும் தயாரிப்பாளர்களும் அந்த நடிகையை சீண்டுவதில்லை. ஆனால் வளர்ந்து வரக்கூடிய, புதுமுகங்களாக அறிமுகமாக கூடிய நடிகைகளை தங்களது பாலியல் இச்சைக்கு இரையாக்கி விடுகிறார்கள்.

Dhanush Idly Kadai Actress Shalini Pandey Shares Her Worst Experience in Shooting Spot

ஷாலினி பாண்டே: படப்பிடிப்புத் தளத்தில் இவ்வாறு ஏதாவது நடந்து அது படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் தெரிந்தாலும், அங்கு உள்ளவர்களே சம்பந்தப்பட்ட நடிகையிடம் இதுபற்றி நீ வெளியே கூறினால் உனக்குத்தான் பட வாய்ப்புகள் வராது எனக் கூறி, நடிகையை ஆஃப் செய்து விடுகிறார்கள். அப்படியான சம்பவம் குறித்துதான் நடிகை ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.

Dhanush Idly Kadai Actress Shalini Pandey Shares Her Worst Experience in Shooting Spot

அத்துமீறல்: தற்போது தனுஷ்ஷின் இட்லி கடை படத்தில் நடித்துள்ள ஷாலினி பாண்டே, தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட தர்மசங்கடமான சூழல் குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது, " அப்போது எனக்கு 22 வயது. நான் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். கேரவனில் நான் உடை மாற்றிக் கொண்டு இருக்கும்போது, அந்த படத்தின் இயக்குநர் கேரவன் கதவை தட்டாமல் உள்ளே நுழைந்து விட்டார். நான் கத்தி விட்டேன். இயக்குநரை திட்டி அனுப்பிவிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள், இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் எனக் கூறினார்கள். அப்போது எனக்கு இந்த பிரச்னையை எப்படி கையாள வேண்டும் எனத் தெரியவில்லை என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன்" என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X