மலையாள நடிகைக்கு நடிப்பு சொல்லித்தரும் இயக்குனர் தனுஷ்..!
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஓரு மலையாள நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.
பவர் பாண்டி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் தனுஷ். மெர்சல் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஸ்ரீதேனாண்டால் பிலிம்ஸ் தயாரிக்கும் பெயரிடப்படாத இப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே. சூர்யா அதித்திராவ் ஹைதரி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில் மலையாள நடிகையான அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
21 வயதே ஆகும் இளம் நடிகையான அனு இம்மானுவேல் அழகானவர், அமெரிக்காவில் பிறந்தவர். 2011 ஆம் ஆண்டிலிருந்து மலையாளப் படங்களில் நடித்து வரும் அனு, மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படத்தில் மல்லிகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
பொதுவாக சக நடிகைகளுடன் நட்பாகப் பழகி, நடிப்பு திறனை வெளிக்கொண்டு வரக்கூடியவர் தனுஷ். அந்தவகையில் இந்த திரைப்படத்தில் அனு இம்மானுவேல் நன்கு பயன்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
தனுஷ் இயக்குனராக ஒரு பக்கம் கலக்கிக் கொண்டிருக்க அவர் நடிப்பில் அடுத்ததாக வட சென்னை மற்றும் கௌதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.


Click it and Unblock the Notifications











