நான் இப்படித்தான்.. கொஞ்சம் கஷ்டம்தான்.. ஓபனாக போட்டுடைத்த தனுஷ்.. செமயா பேசிருக்காரே
சென்னை: கோலிவுட்டில் இப்போதைக்கு பிஸியான நடிகர் யார் என்று கேட்டால் அது தனுஷ்தான். அவரது கையில் எக்கச்சக்கமான படங்கள் இருக்கின்றன. அதேபோல் இயக்கத்திலும் பிஸியாக இருக்கிறார். இப்படி படு பிஸியாக இருக்கும் தனுஷுக்கு சில வாரங்களுக்கு முன்புதான் டைவர்ஸ் நடந்தது. சட்டப்பூர்வ விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பும் கொடுத்துவிட்டது. இது ஒருபக்கம் இருக்க அவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவிவருகிறது.
தனுஷ் கோலிவுட்டில் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் சரியாக போகாவிட்டாலும் தனுஷின் நடிப்பும், ஆக்ஷனும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பாடலும் பெரிதும் கொண்டாடப்பட்டன. அதேசமயம் தனது 50ஆவது படம் இப்படி சொதப்பலான ரிசல்ட்டை வாங்கிவிட்டதே என்று அவர் கொஞ்சம் அப்செட்தான் ஆகியிருப்பார். ஏனெனில் நிறைய செலவு செய்து எடுக்கப்பட்ட அந்தப் படம் வசூல் ரீதியாக ரொம்பவே அடிவாங்கியது என்பதுதான் உண்மை.

குபேரா: ராயன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். ஏற்கனவே தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி (லக்கி பாஸ்கர் இயக்குநர்) இயக்கத்தில் அவர் நடித்த வாத்தி திரைப்படம் காலை வாரியது. எனவே குபேரா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் தனக்கான நிலையான மார்க்கெட்டை பிடித்துவிட வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கிறார் தனுஷ். இதில் அவருடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இயக்கத்திலும் பிஸி: நடிப்பில் ஒருபக்கம் பிஸியாக இருக்கும் அவர் இயக்கத்திலும் பிஸியாக இருக்கிறார். அந்தவகையில் அவர் இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அதிலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் இட்லி கடை என்ற படத்தையும் அவரே இயக்கி நடித்துவருகிறார். இதில் நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படங்கள் தவிர்த்து இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தலா ஒரு படத்தில் நடிக்கிறார் அவர்.
தனுஷை சுற்றி பிரச்னைகள்: இது ஒருபக்கம் இருக்க; தனுஷ் என்றாலே சர்ச்சைகள், பிரச்னைகள் என்பதாகிவிட்டது. முதலில் சுசித்ரா அவர் பற்றி ஏகப்பட்ட விஷயங்களை பேசினார். அதனையடுத்து ஐஸ்வர்யாவும் தனுஷும் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து அந்த விவாகரத்தையும் பெற்றுவிட்டார்கள். இந்தப் பிரச்னை போய்க்கொண்டிருக்கும்போதே நயன்தாராவுக்கும் தனுஷுக்கும் இடையே மோதல் வெடித்தது. நயன் காட்டமான கடிதத்தை வெளியிட்டாலும் அமைதியாக இருந்த தனுஷ்; ஒருகட்டத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் தனுஷ் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. என்னை நோக்கி பாயும் தோட்டா பட சமயத்தில் இயக்குநர் கௌதம் மேனனுடன் அவர் செய்த உரையாடலில், “என்னை புரிந்துகொள்வது உண்மையிலேயே கொஞ்சம் கஷ்டமான ஒன்றுதான். என்னிடம் பழக பழகத்தான் என்னைப் பற்றி முழுதாக புரிந்துகொள்ள முடியும். யாராலும் என்னுடன் பழகிய உடனேயே க்ளோஸ் எல்லாம் ஆகிவிட முடியாது. அதற்கு சில நாட்கள் வேண்டும்.
நன்கு புரியும்: அதேசமயம் என்னுடன் க்ளோஸ் ஆகிவிட்டால் என்னைப் பற்றி அவர்கள் நன்றாகவே புரிந்துகொள்வார்கள். ஒரு படத்தில் வசனம் சொல்வேன் இல்லையா, 'என்னை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்' என்று. அதுபோல்தான் என்னுடன் பழக பழகத்தான் புரியும். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் செம பக்குவமாக பேசியிருக்கிறாரே தனுஷ் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











