திருமண பேச்சு ஓடும் நேரம்.. தனுஷும் மிருணாள் தாகூரும் இப்படி இருக்காங்களே.. ஒரே வீட்டில் ஜாலியா?
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷ்; சில காரணங்களால் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதற்கு பிறகு சிங்கிளாக வாழ்ந்துவரும் அவர் கடந்த வருடத்தில் மட்டும் மூன்று படங்களில் நடித்திருந்தார். அவை அனைத்துமே சுமார் ரகம்தான். இந்நிலையில் அவருக்கும், மிருணாள் தாகூருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என தகவல் வெளியாகியிருக்கிறது.
தனுஷுக்கும், நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போதிருந்து சில வருடங்கள் முன்னர்வரை ஒன்றாக வாழ்ந்தார்கள். சில காரணங்களால் கடந்த 2024ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகன்கள். இரண்டு பேரையும் கோ பேரண்ட்டிங் முறையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் வளர்ப்பார்கள் என தெரிகிறது. இந்த விவாகரத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
கரியரில் பிஸி: இந்த விவாகரத்துக்கு பிறகு தனுஷ் தனது கரியரில் மேற்கொண்டு பிஸியாகிவிட்டார். கடந்த வருடத்தில் மட்டும் மொத்தம் மூன்று படங்களில் (இட்லி கடை, குபேரா, தேரே இஷ்க் மெய்ன்) நடித்தார். அவற்றில் இட்லி கடை படத்தை அவரே இயக்க்கவும் செய்திருந்தார். தனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் அம்மூன்று படங்களிலும் அவர் இறக்கியிருந்தாலும் படங்கள் மெகா ஹிட் ஆகாமல் சுமார் ஹிட் என்ற அளவிலேயே நின்றுகொண்டன.

காதல் கிசுகிசு: பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை யாருடனும் கமிட்டானதாக தெரியவில்லை. ஆனால் நடிகை மிருணாள் தாகூரை தீவிரமாக காதலித்துவருகிறார் என்றும்; பல இடங்களுக்கு அவர்கள் ஒன்றாக டேட்டிங் செல்வதாகவும் பேசப்படுகிறது. தேரே இஷ்க் மெய்ன் பட ரிலீஸ் சமயத்தில்கூட நடந்த ஒரு பார்ட்டியில் தனுஷுடன் கலந்துகொண்டார் மிருணாள். மேலும் இன்ஸ்டாகிராமில் தனுஷ் குடும்பத்தினரும், மிருணாளும் ஒருவரையொருவர் ஃபாலோ செய்துகொண்டதை வைத்தும் இரண்டு பேரின் காதல் பற்றிய பேச்சுக்கள் சோஷியல் மீடியாக்களில் வலுவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நோ ரியாக்ஷன்: ஆனால் இதுபற்றி அவர்கள் இரண்டு பேரும் பெரிய அளவில் ரியாக்ட் செய்துகொள்ளவில்லை. அதேசமயம் மிருணாளின் போஸ்ட்டுகளுக்கு தனுஷ் கமெண்ட் செய்யவும் மறக்கவில்லை. ஆனால் அதெல்லாம் சாதாரணமதுதான்; அதனை வைத்து மட்டும் அவர்களுக்கிடையே காதல் என சொல்லிவிட முடியாது என்றும் ஒருதரப்பினர் சொல்லிவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க நேற்றிலிருந்து புதிய தகவல் ஒன்றும் பாலிவுட் மற்றும் கோலிவுட் திரைத்துறையில் ஓட தொடங்கியுள்ளது.
என்ன தகவல்?: அதாவது தனுஷுக்கும், மிருணாள் தாகூருக்கும் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது என்பதுதான் அது. இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து சமீபத்தில்தான் பேசியதாகவும்; திருமணம் செய்து வைப்பதில் பூரண சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா இல்லை வழக்கம்போல் கிசுகிசுவா என்பது சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கு மட்டுமே தெரியும்.
வெளியான புகைப்படம்: தங்களை பற்றி வரும் கிசுகிசுக்களை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. இந்நிலையில் இரண்டு பேரும் நெருக்கமகா ஒரே இடத்தில் சிரித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று எக்ஸ் தளத்தில் பரவியிருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்களோ இருக்கும் இடத்தை பார்த்தால் ஒரே வீடு மாதிரி இருக்கிறதே என கொளுத்திப்போட ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் புகைப்படங்கள் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்துள்ளன.


Click it and Unblock the Notifications











