மூலையில் உக்காந்து அழும் மமிதா பைஜூ.. செல்லத்த என்னடா பண்ணி வச்சிருக்கீங்க!
சென்னை: மமிதா பைஜூ என்ற பெயரை கேட்டதுமே இந்த காலத்து இளசுகள் துள்ளி குதித்து ஆட்டம் போட ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு ஜென் ஸிகளின் மனதில் இடம்பிடித்த நடிகையாக இருக்கிறார் மமிதா. தற்போது இவர் தனுஷுடன் 'கர' படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் குறித்த அட்டகாசமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
மலையாள திரைப்படமான 'ப்ரேமலு' படத்தில் க்யூட்டாக நடித்து அனைவருக்கும் பிடித்த நடிகையாக மமிதா பைஜு மாறினார். ப்ரேமலு படத்திற்கு பிறகு, பிரதீப் ரங்கநாதன் நடித்த 'ட்யூட்' படத்தில் நடித்து தமிழில் அறிமுகம் ஆனார். அந்த படம் நல்ல வசூலை பெற்றதை தொடர்ந்து, விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் விஜய்யின் மகளாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சூர்யாவுடன் விஸ்வநாத் & சான்ஸ் படத்திலும், தனுஷூடன் கர, இரண்டு வானம் என அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
தனுஷின் கர: போர் தொழில் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' என்ற படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சூரஜ் வெஞ்சாரமூடு, கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவும் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மமிதா பைஜு: 'கர' திரைப்படம் அடுத்த மாதம் ஏப்ரல் 30ந் தேதி வெளியாகி இருக்கும் நிலையில் இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. கர படத்திந் மமிதாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், சோகமான முகத்தோடு மூலையில் உக்காந்து அழுதபடி இருக்கிறார். மேலும், படத்தில் மமிதா பைஜு செல்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் டேய்.. செல்லத்த என்னடா பண்ண வச்சி இருக்கீங்க என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த படத்தில் மமிதா பைஜூ ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் என்பது இந்த போஸ்டரை பார்க்கும் போதே தெரிகிறது.


Click it and Unblock the Notifications