கர படத்தை காலி பண்ண போறதே மமிதா பைஜு தான்.. கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை.. குவியும் ட்ரோல்கள்!

சென்னை: போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு நடித்துள்ள 'கர' படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச் நடைபெற்றது. ஆனால், இதுவரை டிரைலரோ, படத்தின் பாடல்களோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகவே இல்லை.

போர் தொழில் படத்தில் மலையாள நடிகை நிகிலா விமலை ஹீரோயின் ஆக்கியது போலவே, கர படத்திலும் விக்னேஷ் ராஜா மமிதா பைஜுவை ஹீரோயின் ஆக்கியுள்ளார். சமீபத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான எல்ஐகே படத்துக்கு வில்லியே ஹீரோயின் க்ரித்தி ஷெட்டியின் நடிப்பு தான் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், கர படத்தில் கிராமத்துப் பெண்ணாக மமிதா பைஜு கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை என ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

Dhanush s Kara Trailer not peaked in Youtube Trending and Mamitha Baiju looks get trolled
Photo Credit:

மேலும், தனுஷின் கர டிரைலர் வெளியாகி 18 மணி நேரம் ஆகியும் இந்த நிமிடம் வரை 3 லட்சம் வியூஸ் தான் வந்துள்ளது என்றும் பரிதாபங்கள் வீடியோ கூட போட்ட உடனே ஒரு மில்லியன் வியூஸ் தாண்டுகிறது என ட்ரோல் செய்து வருகின்றனர்.

டீசல் கதை போல: ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடித்த டீசல் திரைப்படத்தின் கதை நன்றாக இருந்தாலும், அந்த படம் கடந்த தீபாவளிக்கு வெளியான நிலையில், ரசிகர்களை கவரவில்லை. கர படத்தின் கதையும் கிட்டத்தட்ட கத்தார் போர் மற்றும் டீசல் தட்டுப்பாடு கதையாக வந்துவிடுமோ என்கிற அச்சம் எழுவதாக தனுஷ் ரசிகர்களே கூறி வருகின்றனர். படத்தின் டிரைலரை பார்த்தாலும் கர்ணன் படத்தை பார்த்தது போலவே தனுஷின் நடிப்பு உள்ளதாக கலாய்த்து வருகின்றனர்.

டிரெண்டாகாத கர டிரைலர்: 18 மணி நேரம் முன்பாக வந்த கர டிரைலர் இன்னமும் 4 லட்சம் வியூஸ் கூட தாண்டவில்லை. தனுஷின் ரவுடி பேபி, ஒய் திஸ் கொலவெறி பாடல்களே யூடியூபில் ஏகப்பட்ட டிரெண்டிங் ரெக்கார்டுகளை செய்த நிலையில், தொடர் தோல்வி காரணமாக தனுஷின் கர படம் வருவதே பலருக்கும் தெரியவில்லை என்றும் படக்குழுவும் சரியான புரமோஷனை செய்யவில்லை என்கின்றனர்.

மமிதா பைஜு மீது பழி: கர படத்தை காலி பண்ண போவதே மமிதா பைஜு தான் என்றும் கிராமத்து லுக் அவருக்கு சுத்தமாக ஒட்டவில்லை என்றும் டிரைலரில் அவரது நடிப்பை பார்த்தாலே ரொம்பவே செயற்கைத்தனமாக தெரிகிறது என்றும் படம் வெளியான பிறகு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தால் மட்டுமே இந்த படம் தப்பிக்கும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X