அடேங்கப்பா.. கார்த்திகை தீபமே களைகட்டுதே.. தீபங்களை பேச வைக்கும் தர்ஷா குப்தா.. செம க்ளிக்ஸ்!

சென்னை: தமிழில் அதிகமாக பதிவுகளை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நடிகை தர்ஷா குப்தா தமிழர்களின் தீபத் திருநாளாம் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

குக் வித் கோமாளி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோயினாகும் கனவை நனவாக்க பெருமுயற்சி எடுத்து அதில் சாதித்தும் காட்டியுள்ளார் தர்ஷா குப்தா.

Dharsha Gupta celebrates Karthigai Deepam and shares super stills

ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் படங்களை தொடர்ந்து தற்போது மெடிக்கல் மிராக்கிள் படத்திலும் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.

கவர்ச்சிக் கடல்: 2.2 மில்லியன் ஃபாலோயர்களுடன் இன்ஸ்டாகிராம் பியூட்டியாக வலம் வரும் தர்ஷா குப்தா சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு பிகினி புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு இணையத்தின் சூட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றார். இந்நிலையில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பிரத்யேகமாக எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: ”விளக்குகளின் ஒளி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியின் பிரகாசத்தில் நிரப்பட்டும் இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்” என நடிகை தர்ஷா குப்தா தற்போது அழகான உடைகளை அணிந்துக் கொண்டு அம்சமாக தீபங்களை ஏற்றும் புகைப்படங்களை வெளியிட்டு கார்த்திகை தீப வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

ஒளி ஒளியை ஏற்றியதோ: தர்ஷா குப்தாவின் கார்த்திகை தீப ஸ்பெஷல் புகைப்படங்களை பார்த்து ஸ்தம்பித்துப் போன ரசிகர்கள் “ஒளி ஒளியை ஏற்றியதோ” என்றும் அழகு தேவதை என்றும் கமெண்ட்டுகளை பதிவிட்டு நடிகை தர்ஷா குப்தாவுக்கு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகளை சொல்லி வருகின்றனர்.

குவியும் லைக்ஸ்: கார்த்திகை தீப திருநாளுக்கு ஆரஞ்சு மற்றும் நீல நிற கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு எந்தளவுக்கு ரசிகர்களை கவர்வதற்கு கிளுகிளுப்பாக போஸ் கொடுக்க வேண்டுமோ அதையும் மறக்காமல் செய்து லைக்குகளை அள்ளி உள்ளார் தர்ஷா குப்தா.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தாலும், இன்னமும் ஒரு படம் கூட சரியான ஹிட் கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டாவது தர்ஷா குப்தாவின் சினிமா வாழ்க்கை ஒளிரட்டும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X