செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா.. அந்தரத்தில் ரிஸ்க் எடுத்த தர்ஷா குப்தா.. மழையில் டான்ஸ் வேற!
சென்னை: விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். அந்த நிகழ்ச்சி முடிவதற்கு முன்னதாகவே அவருக்கு மோகன். ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், அந்த படம் தர்ஷா குப்தாவுக்கு பெரிதாக ஓடவில்லை. அடுத்ததாக அவர் சன்னி லியோன் உடன் இணைந்து ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் படுதோல்வியை சந்தித்தது.

யோகி பாபுவுக்கு ஜோடியாக மெடிக்கல் மிராக்கிள் படத்தில் நடித்து வரும் தர்ஷா குப்தா மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
குக் வித் கோமாளி தர்ஷா குப்தா: விஜய் டிவியில் வெளியான அவளும் நானும் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப் பூவே உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், வெள்ளித்திரைக்கு சென்ற தர்ஷா குப்தா சில்வர் ஸ்க்ரீனில் பெரிதாக ஷைன் ஆகவில்லை.
3 படங்கள்: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் மற்றும் மெடிக்கல் மிராக்கிள் படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. தர்ஷா குப்தா ஆடை குறித்து சதீஷ் கமெண்ட் அடித்ததற்கு எதிராக சர்ச்சைகள் வெடித்த நிலையில், தர்ஷா குப்தாவும் சதீஷுக்கு எதிராக குரல் எழுப்பினார். அதன்பின்னர் என்ன ஆனது என்றே தெரியவில்லை தர்ஷா குப்தாவுக்கு பட வாய்ப்புகள் அப்படியே குறைந்து விட்டது.
மழையில் டான்ஸ்: 2.5 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ள தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழையில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஜில்லாக்கி உள்ளார். பாலக்காடுக்கு சுற்றுலா சென்றுள்ள தர்ஷா குப்தா அங்கே ஜாலி பண்ணும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
விவேக் காமெடி: ஜெயம் ரவி, அசின் நடிப்பில் வெளியான எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் இடம்பெற்ற விவேக் காமெடியான “செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா.. அல்லா அல்லா.. தேவனே என்னை பாருங்கள்” காமெடியை போட்டு அந்தரத்தில் தொங்கியபடி நடக்கும் சாகச வீடியோவை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











