இப்படி ஒரு போஸ் கொடுப்பீங்கன்னு யாரும் நினைக்கல.. தர்ஷா குப்தாவின் குளுகுளு பிக்ஸ்!
சென்னை: திறமையை காட்டி பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர் தான் தர்ஷா குப்தா. சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்த தர்ஷா குப்தா சின்னத்திரை பக்கம் சென்று சீரியலில் திறமையை காட்டி நடித்தார். இதைத் தொடர்ந்து ஒரு சில படத்தில் நடித்துள்ள தர்ஷா, இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி போட்டோவை ஷேர் செய்து வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் சீரியல் மூலம் அறிமுகமான தர்ஷா குப்தா. அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வகை வகையாக சமைத்து அசத்தினார். அது மட்டுமில்லாமல் புகழுடன் சேர்ந்து கொண்டு இவர் செய்த கலாட்டா பார்வையாளர்களை கவர்ந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவருக்கு, மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே தோல்வி படமாக அமைந்தால், அம்மணி மிகவும் அப்செட்டானார்.

தர்ஷா குப்தா: இதைத்தொடர்ந்து தர்ஷா குப்தா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இணையத்தில் ஏராளமான பாலோவர்களை இவர் வைத்து இருப்பதால், நிச்சயம் இவர், இறுதி வரை வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தினமும் புது புது கதையை சொல்லி அழுது அழுது ரசிகர்களை கடுப்பாக்கினார். இதனால், நாமினேஷனில் சிக்கி மூன்று வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தர்ஷா குப்தா, விளையாட்டு புரியவில்லை. இப்போது தான் புரிந்து விளையாடலாம் என நினைத்து இருந்தேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டது என்று வருத்தப்பட்டு பேசி இருந்தார்.
கவர்ச்சி ஆட்டம்: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்ஷா குப்தா, சினிமாவில் ஒரு நடிகையாக வரவேண்டும் என்றால், கவர்ச்சி காட்டினால்தான் முடியும் என்பதை நன்கு தெரிந்து கொண்டு இன்ஸ்டாகிராமில், ஓவர் கவர்ச்சியில் விதவிதமான போட்டோஷூட்களை பகிர்ந்து அலப்பறை கொடுத்து வருகிறார். இந்த புகைப்படங்கள் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் கண்ணில் படாதா என்கிற ஏக்கத்துடன் இருக்கிறார். அந்த வகையில், தற்போது தர்ஷா குப்தா முன்னழகை அப்பட்டமாக காட்டி, இரண்டு கைகளையும் தூக்கி கவர்ச்சி உடையில் தரிசனம் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், தர்ஷாவை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர். மேலும், தர்ஷா குப்தா, இந்த போட்டோவிற்கு கேப்ஷனாக ரசிப்பது உன் கண்கள் என்றால் எழுதுவது என் கைகள் அல்லவா என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











