Dharsha gupta: ஜோதிகா என்ன ஜோதிகா… கருப்பு உடையில் தர்ஷா குப்தாவை பாருங்க!
சென்னை: இணையத்தில் படுஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
கோவையை பூர்வீகமாக கொண்ட தர்ஷா குப்தா, நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால், மாடலிங் துறையில் இறங்கினார்.

ஒரு சில விளம்பரங்களில் நடித்து வந்த அவர் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார்.
நடிகை தர்ஷா குப்தா: மாடல் அழகியான தர்ஷா குப்தாவிற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் சீரியலில், புடவையை சுற்றிக்கொண்டு குடும்ப குத்துவிளக்காக வந்து இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தார்.
ஏராளமான ரசிகர்கள்: இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில சீரியலில் நடித்த தர்ஷா குப்தா, குக்வித் கோமாளியில் குக்காக வந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறவில்லை என்றாலும், புகழுடன் சேர்ந்து கொண்டு இவர் செய்த அலப்பறையால் இவருக்கு என்ற தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது.
சினிமாவில் வாய்ப்பு: சீரியலில் நடித்து வந்த தர்ஷா குப்தா ஜி மோகன் இயக்கிய ருத்ரதாண்டவம் படத்தில் ரிஷிக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின், ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், தற்போது இவர் யோகி பாபு நடிக்கும் மெடிக்கல் மிராக்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பதிவு: படவாய்ப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை எனக்கு இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று விதவிதமான போட்டோக்களை இன்ஸ்டாவில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது. கருப்பு உடையில், சிறுத்த இடையை தெரியும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
தமிழில் கேப்ஷன்: தர்ஷா குப்தாவின் இந்த படங்கள் பல ஆயிரம் லைக்ஸை குவித்து வருகிறது. இந்த படத்திற்கு கேப்ஷனாக நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும் என்று பதிவிட்டுள்ளார். தமிழ் விரும்பியான தர்ஷா குப்தா, தனது புகைப்படத்திற்கு கேப்ஷனான தமிழில் கேப்ஷன் போடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். நடிகை தர்ஷா குப்தாவை இன்ஸ்டாகிராமில் இரண்டு புள்ளி இரண்டு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இதன் மூலம் இவருக்கு கணிசமான வருமானமும் வருகிறது.


Click it and Unblock the Notifications











