வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்.. வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்.. தர்ஷா குப்தாவின் ரமலான் வாழ்த்து!

சென்னை: படு கிளாமராக போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்களை தூங்கவிடாமல் செய்து வரும் இளம் நடிகை தர்ஷா குப்தா ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர் சகோதரர்களுக்க்கு சூப்பரான வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரேபிய நாடுகளில் முன்பே பிறை தெரிந்ததால் நேற்று கோலாகலமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

சமூக வலைதளங்களில் ரம்ஜான் பண்டிகை குறித்த பிரியாணி மீம்களையும் நெட்டிசன்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரம்ஜான் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ரனர். இந்நிலையில், குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்

வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்

கவர்ச்சிகரமான புகைப்படங்களாக இருந்தாலும் சரி, குடும்பப்பாங்கான புகைப்படங்களாக இருந்தாலும் சரி நடிகை தர்ஷா குப்தா தொடர்ந்து தமிழில் கேப்ஷன்களை போட்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார். இந்நிலையில், "வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்.. வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்.. அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்" என அவர் பதிவிட்டு இருக்கும் ரமலான் வாழ்த்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முஸ்லிம் பெண் போலவே

முஸ்லிம் பெண் போலவே

தீபாவளிக்கு பாவாடை சட்டையில் போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அப்படியே முஸ்லீம் பெண் போலவே சுடிதார் அணிந்து, செம க்யூட்டாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

பிரியாணி இல்லையா

பிரியாணி இல்லையா

ரம்ஜான் அதுவுமா கையில் பிரியாணி தட்டுடன் ஒரு போட்டோஷூட் நடத்தி போட்டோ போட்டு இருந்தீங்கன்னா சூப்பரா இருந்திருக்கும் தர்ஷா குப்தா என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும், எங்களுக்கெல்லாம் இன்னைக்கு பிரியாணி ட்ரீட் இல்லையா என்றும் கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

படங்களில் பிசி

படங்களில் பிசி

ஜி மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் தர்ஷா குப்தா. அந்த படத்தை தொடர்ந்து சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் தமிழ் படமான ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தர்ஷா குப்தாவுடன் இணைந்து சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் ஓ மை கோஸ்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X