Dharsha gupta : அச்சு அசல் சாகுந்தலையாக மாறிய தர்ஷா குப்தா.. அதுக்குன்னு இப்படி ஒரு கிளாமர் தேவையா!
சென்னை : இணையத்தின் செல்லப்பிள்ளையாக வரும் ஹாட் பேபி தர்ஷா குப்தா அச்சு அசல் சாகுந்தலையாகவே மாறி போஸ் கொடுத்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த தர்ஷா குப்தா கல்லூரி காலத்திலேயே மாடலிங்கில் ஈடுபாட்டுடன் இருந்தார். அதன்மூலம் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

தர்ஷா குப்தா : தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா, விஜய் தொலைக்காட்சியில் அதிகம் தென்பட்டார். இதையடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டவம் படத்தில் நடித்தார். அதன் பின் சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்து வந்தார்.
வித்தியாசமான கான்செப்ட் : இணையத்தில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளிவரும் தர்ஷா குப்தா. வித்தியாசமான கான்செப்ட்களில் புகைப்படத்தை வெளியிடுவதில் கை தேர்ந்தவர், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராதா கெட்டப் போட்டு இருந்தார், அதே போல கங்குபாய் கத்யாவாடி படத்தில் நடித்த ஆலியா பட் போல கெட்டப் போட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அச்சு அசல் சமந்தா போல : அந்த வகையில் தர்ஷா குப்தா, சமந்தா நடித்த சாகுந்தலம் கெட்டப்பில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் தர்ஷா குப்தாவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றனர். இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் அதுக்குன்னு இப்படி ஒரு கிளாமர் தேவையா என கேட்டு வருகின்றனர்.
சாகுந்தலம் : புராண வரலாற்று திரைப்படமான சாகுந்தலம் படத்தில் நடிகை சமந்தா சாகுந்தலையாக நடித்திருந்தார். குணசேகரன் இயக்கிய இப்படம் ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்கில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது. சுமார் 60 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த வசூலை தரவில்லை. இந்த படம் தோல்விப்படமாக ஆனாலும் இப்படத்தின் சமந்தாவின் கெட்டப் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.



Click it and Unblock the Notifications











