தூக்கங்களை தூக்கி சென்றாய்... பீலிங் காட்டிய தர்ஷா குப்தா
சென்னை : தர்ஷா குப்தா கடந்த 2018-ல் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர்.
Recommended Video
தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் இவர் பிசியாக காணப்படுகிறார்.

சின்னத்திரை நடிகை
மாடலாக தன்னுடைய கேரியரை துவக்கியவர் தர்ஷா குப்தா. தொடர்ந்து சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடர் மூலம் ரசிகர்களை ஏராளமாக சம்பாதித்தார். அடுத்தடுத்து மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி புகழ் தர்ஷா
ஆனால் இவையனைத்தையும்விட விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2 நிக்ழச்சியே இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. நிகழ்ச்சியில் புகழ், வர்ஷா காம்பினேஷன் மற்றும் அவர்களது சேட்டைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து சிறப்பான போட்டியாளராக அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சமூக வலைதளங்களில் பிசி
இதனிடையே சமூக வலைதளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் தர்ஷா குப்தா. பட வாய்ப்பை பெறுவதற்காக தொடர்ந்து பல போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இத்தகைய போட்டோஷுட்கள் மூலம் இவருக்கு படவாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.

அடுத்தடுத்த படங்கள்
திரௌபதி படத்தையடுத்து ரிச்சர்ட்டுடன் ருத்ரதாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடித்தார் தர்ஷா. மோகன் ஜி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கதைகளை கேட்டு வருகிறார்.

பாடல் வீடியோ பதிவு
சமூக வலைதளத்தில் பரபரப்புடன் செயல்பட்டு வரும் தர்ஷா குப்தா, தற்போது தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். மேலும் இருக்கையில் சாய்ந்தவாறே வாரணம் ஆயிரம் படத்தின் பாடலை இவர் பாடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











