காக்காவை வளர்க்கும் டெஸ்லா குயின்.. ‘வாழை’ பட நடிகை திவ்யா துரைசாமிக்கு இப்படியொரு பழக்கமா?
சென்னை: டெஸ்லா குயின் என இன்ஸ்டாகிராமில் இடுப்பழகை காட்டி திவ்யா துரைசாமி வெளியிட்டு வந்த போட்டோக்களை பார்த்து ஆரம்பத்தில் ரசிகர்கள் அவரை வர்ணித்து வந்தனர். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடிக்கத் தொடங்கிய திவ்யா துரைசாமிக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.
வாழை படத்தில் ஹீரோவின் அக்காவாகவும் கலையரசன் ஜோடியாக இவரும் ஒரு ஹீரோயினாகவே நடித்து அசத்தியிருப்பார். பொதுவாக நடிகைகள் எல்லாம் நாய்க்குட்டி, பூனைக்குட்டி, கிளி உள்ளிட்டவற்றை வளர்ப்பதை பார்த்திருப்போம்.

ஆனால், ரொம்பவே வித்தியாசமாக காகத்தை வளர்க்கிறார் நம்ம திவ்யா துரைசாமி. அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
சோறு வச்சா போதும்: காகங்களை முன்னோர்கள் என சிலர் நம்புவது உண்டு. வீடுகளில் காகங்களுக்கு சோறு வைக்கும் பழக்கமும் அமாவாசை ஆனால், அவற்றுக்கு படையலே போடும் வாடிக்கையும் நாம் பார்த்திருப்போம். விவேக் உடன் காமெடியில் காக்கா கோபால் நடித்திருப்பார். அவர் அழைத்தால் காகங்கள் எல்லாம் அவர் அருகே வரும் காட்சிகளையும் பார்த்திருக்கிறோம்.
காகத்தை வளர்க்கும் திவ்யா துரைசாமி: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன், ப்ளூ ஸ்டார், அதர்ம கதைகள் மற்றும் வாழை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள திவ்யா துரைசாமி அடிக்கடி தன்னைத் தேடி சில காக்கைகள் வந்துவிடும் என்றும் கடந்த ஒரு மாதமாக இந்த காக்கை தன்னுடனே இருந்து வருகிறது என தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உடல்நலம் குன்றிய காகத்திற்கு சிகிச்சை அளித்தும் பேணி பாதுகாத்து வருகிறாராம். எல்லா உயிர்களும் சிறந்தவை தான். ஒற்றுமையை கற்றுக் கொடுக்கும் காகத்தை வளர்க்கும் திவ்யா துரைசாமியை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அடுத்து என்ன?: வாழை படத்திற்கு பிறகு ஓம் காளி ஜெய் காளி என விமல் நடித்த வெப்சீரிஸில் நடித்த திவ்யா துரைசாமி புதிதாக எந்த படத்தில் நடிக்கிறார் என்கிற எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. கூடிய சீக்கிரமே நல்ல வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











